பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



எங்கே போகிறோம்?

அபுதாபி முஸப்பா பகுதியில் அமைந்திருக்கக் கூடிய ஈ.டி.ஏ. மெல்கோ கேம்ப் வளாகத்தில் நடைபெறுகின்ற மீலாது விழாவிலே கலந்த கொள்ளப் பேராவலோடு வந்தேன். ஆனால், விழா தொடங்கும் நேரத்தில் மின்தடை ஏற்பட்டு எங்கும் இருள் கவிந்துவிட்டது. இருளிலே நாமெல்லாம் சிறிது நேரம் இருக்க நேரிட்டது. எனினும், சிறிது நேரத்தில் மின்தடை சரி செய்யப்பட்டு எங்கும் ஒளி பரவ இவ்விழா இனிது தொடங்கியது. இருள் கவிந்திருந்த நேரத்தில் உன் சிந்தனை, உணர்வு அனைத்தும் பெருமானார் (சல்) பிறந்து வளர்ந்து வந்த அந்த நாட்களை நோக்கிச் சென்றது. ஆயிரத்து நானூறு ஆண்டுகட்கு முன்னர் அறியாமை இருள் கவிந்து, மூட நம்பிக்கையில் மூழ்கிக் கிடந்த மக்களை இஸ்லாம் எனும் இறைநெறி தீபம் ஏந்தி, அறிவு வெளிச்சத்துக்கு அரபு மக்களை அழைத்து வந்த அண்ணல் நபிகள் நாதர் (சல்) அவர்களின் பிறந்த நாள் விழாவை இன்று பெரு மகிழ்வோடு கொண்டாடிக் கொண்டுள்ளோம்.

இருளகற்றிய ஏந்தல்

அனல் பரக்கும் இந்தப் பாலைப் பகுதியில் மின் விசிறி ஏதுமில்லாமல் இருளில் இருந்த, இந்தக் கொஞ்ச நேரத்தில்