பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

193

வேலையால் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு தன் குடும்பத்தின் பசித் துன்பத்தைப் போக்கி, தன் இல்லறக் கடமைகளை இனிதே நிறைவேற்றும் அந்த மரம் வெட்டிக் குத்தான் சொர்க்கம் செல்லும் இருவரில் முதலாவதாக சுவர்க்கத்தில் புகும் பேறு கிட்டும்” என்று கூறியதன் மூலம் உழைப்பின் உன்னதத்தை உணர்த்துகிறார் வள்ளல் நபி (சல்) அவர்கள். அண்ணலார் உழைப்புக்குத் தரும் மரியாதை உழைக்கும் உழைப்பாளி மக்களுக்கு உத்வேக மூட்டக் கூடியதாக உள்ளது.

இந் நேரத்தில் ஒரு இலக்கியச் செய்தி என் நினைவுக்கு வருகிறது. இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பெருங் கடலுள் 'ஆயிரம் மசலா' என்றொரு சிறந்த இலக்கியம் உண்டு. இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களிலே முதலாவது இலக்கியம் இது என்ற பெருமையும் அதற்கு உண்டு. வண்ணக் களஞ்சியப் புலவர் என்று அழைக்கப்படும் சையது இபுறாஹீம் புலவரால் இயற்றப்பட்டதாகும்.

விந்தைக் கேள்வியும் விவேக பதிலும்

நபிகள் நாயகம் (சல்) அவர்கள் இஸ்லாமியப் பிரச்சாரத்தில் முனைப்போடு ஈடுபட்டிருந்த காலகட்டத்தில், அக்காலத்தில் மிகச் சிறந்த அறிஞர்களில் ஒருவராகக் கருதப்பட்ட யூத சமயத்தைச் சார்ந்த இப்னு சலாம் என்பவர் பெருமானார் (சல்) அவர்களை அணுகி உங்களை இறுதி இறைத்தூதர் என்கிறீர்களே! உங்கள் மூலம் இறைச்செய்தி வந்திருப்பதாகக் கூறியிருக்கிறீர்களே! நான் கேட்கும் ஆயிரம் கேள்விகளுக்கு உரிய விடையளித்தால், தான் இஸ்லாமிய நெறியை ஏற்பதாகக் கூறுகிறார். இதற்குச் சம்மதித்த பெருமானாரை நோக்கி ஆயிரம் கேள்விகளைத் தொடுக்கிறார். அவற்றில் ஒரு கேள்வி,

‘மண் தரைக்குள் ஏறாது
வானிலிருந்து ஓடாது