பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

195

கள், வழுக்கல்கள் எவை என்பதையெல்லாம் ஆராய்ந்து பார்க்கும் ஆய்வு விழாவாகவும் மீலாது விழா அமைய வேண்டும் என்பதுதான் என் வேணவா. இத்தகைய அறிவுப் பூர்வமான சுய விமர்சனங்கள் நிச்சயம் நம் வளர்ச்சிக்கு வழியாயமையும் என்பதில் ஐயமில்லை.

அண்ணலார் அதிகமதிகம் கேட்ட துஆ

பெருமானாரின் வாழ்க்கை ஏடுகளைப் புரட்டிப்பார்க்கும்போது அவர்கள் தம் வாழ்நாளில் மிக அதிகமதிகமாகக் கேட்ட துஆ 'இறைவா என் அறிவைப் பெருக்குவாயாக' என்பதுதான். இதைப் போலவே இபுறாஹீம் (அலை) அவர்களும் தம் வாழ்வில் அதிகமதிகம் கேட்ட துஆ 'இறைவா! என் அறிவைப் பெருக்குவாயாக!' என்பதுதான். திருமறையும் பெருமானார் (சல்) அவர்களும் அதை அழுத்தமாகவும் ஆழமாகவும் வலியுறுத்தியுள்ளார்களோ அதில் இன்னும் பின்னடைவும், மிகமிகப் பின்னடைவாக இருப்பதுதான் வேதனையிலும் வேதனை தருவதாக உள்ளது. அதுதான் கல்வி வளர்ச்சி.

அறிவைப் பெறுவதற்கு அடித்தளமாக அமைவது கல்வியாகும். கல்வியின் மூலம் அறிவைப் பெருக்கிக் கொள்ள முடியும். ஏனோ அதை மட்டும் ஒதுக்கி வைத்து விட்டு மற்ற காரியங்களையெல்லாம் சிறப்பாகவே செய்து வருகிறோம்.

அறியாதவற்றை அறிய

நபிகள் நாயகம் (சல்) அவர்கள் இறைவனுடைய செய்தியை வஹீயாகப் பெறுகிறார்கள். அவர்கட்கு இறைவன் முதல் செய்தியாக அறிவித்தது எது என்று உங்களிலே பல பேருக்கு நன்றாகத் தெரியும். அறிவு வளர்ச்சிக்கு ஆதாரமான கல்வியைப்பெறத் துணைக் கருவியான எழுதுகோலைக் கொண்டு இறைவன் கல்வி கற்பித்த பாங்கை அறிவிப்பதே அந்த முதல் வஹீ. அறியாதவற்றை