பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/199

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

197பாவம்! அந்த இளைஞர்கள் தங்கள் உறவினர்களிடம் ஊர்க்காரர்களிடம் ஏதேனும் பெரிய வேலையில் சேர்ந்து பணி செய்வதாகக் கூறி வந்திருப்பார்கள். அவர்கள் எந்த ஊர் என்பதை எனக்குக் கூறினால், அந்த ஊர்க்காரர்களை நான் சந்திக்கும்போது, உங்கள் ஊர்ப் பையன்கள் தோஹா வரும் விமானங்களில் 'தோட்டி' வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லிவிடுவேனோ என்ற அச்சம் தான் அவர்கள் ஓட்டத்துக்குக் காரணம்.

முன்பு இதே போல் இன்னொரு சம்பவம். நான் சில ஆண்டுகட்கு முன்பு ஹஜ் பயணம் மேற்கொண்டு மதீனாவில் இருந்தபோது, அங்குள்ள மருத்துவமனைகளின் செயல்பாடுகளை அறிந்து கொள்வதற்காக, ஒரு பத்திரிகையாளன் என்ற முறையில் அங்கிருந்த ஒரு மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். அப்போது அங்கே ஒருவர் கழிவறை சுத்தம் செய்யும் கருவிகளுடன் பணியாற்றிக்கொண்டிருந்தார். அருகில் சென்றபோது, தெரிந்த முகம் போல் தென்படவே, சற்று உற்று நோக்கினேன். எனக்கு 'திக்’ என்றாகி விட்டது. என்னை ஏறிட்டுப் பார்த்த அந்த நபர் மயக்கம் போட்டு விழாத குறையாகப் பேயறைந்தவர்போல் நின்றிருந்தார். இருவருமே ஏதும் பேச இயலாதவர்களாக சில நிமிடங்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு நின்றிருந்தோம் என்றுதான் சொல்ல வேண்டும். அவன் என் நெருங்கிய உறவுப் பையன்.

அவன் சவூதிக்கு வேலைக்குச் சென்றபோது எங்களிடம் கூறியது தான் ஒரு பெரிய பழ மண்டியில் மேலாளராக இருப்பதாக. ஆனால், இங்கு உண்மையிலே பார்க்கும் வேலை கழிவறைகள் சுத்தம் செய்யும் தோட்டி வேலை. எந்தத் தொழிலையும் தாழ்த்திச் சொல்லவில்லை. எந்தத் தொழிலிலும் உயர்வு தாழ்வு பார்ப்பவன் இல்லை. எல்லாமே தொழில்தான். அவன் துப்புறவுப் பணி செய்கிறான். நான் பத்திரிகைத் துறையில் எழுத்துப் பணி செய்கிறேன். இருவர் செய்யும் பணிக்காக மாத ஊதியம்