பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

236


தொகையினர் இஸ்லாமிய மார்க்கத்தில் இணைந்து வருவதையறிந்து வியந்தான். இஸ்லாமிய நெறிகளின் சிறப்பை அறிந்தபோது பெரு மகிழ்வு கொண்டான். இஸ்லாத்தில் இணைந்த மக்கள் வழிபாட்டிற்காக பள்ளிவாசல் கட்ட முயன்றால் அதற்கு அரசு அதிகாரிகள் உதவி செய்ய வேண்டுமெனக் கட்டளையிட்டான். இதன் மூலம் முஸ்லிம்கள் மசூதி கட்ட அரசு நிலங்கள் எளிதாகக் கிடைத்தன. இதன் மூலம் எங்கும் பாங்கொலி எழ, இஸ்லாமியச் செல்வாக்கு அழுத்தமாகவும் ஆழமாகவும் படியத் தொடங்கியது.

சோழ மண்டலத்தில் இஸ்லாம் விரைவாகப் பரவிக் கொண்டிருப்பதை ஸ்ரீபெரும்புதூரில் இருந்த இராமானுஜர் கேள்விப்படுகிறார். வைதீக சமயவாதிகளில் இராமானுஜர் முற்போக்குச் சிந்தனை மிக்கவர். இறைவன் மனித குலத்துக்கு வழங்கிய வேதம் மக்களிடம் நேரிடையாகச் சென்றடையாமல் ஒரு சிலரிடம் மட்டும் முடங்குவதை விரும்பாதவர். இத்தகு சூழ்நிலையில் இஸ்லாமிய வேதத்தை யாரும் படிக்கலாம் என்ற முறை அவரை வெகுவாக ஈர்க்க, சோழ மண்டலம் சென்று உண்மை நிலைகளை அறிய ஆட்களை அனுப்புகிறார். அவர்கள் உண்மை நிலைமையை அறிந்து வந்து விளக்க, வேதம் அனைவருக்கும் சொந்தம், பொது என்பதை நிலைநிறுத்த முடிவெடுக்கிறார். வேதத்தைத் தாங்கள் மட்டுமே படிக்க வேண்டும்; மற்றவர்கள் படிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்த வேதியர்களின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாது, கோயில் மதிலேறி நின்று, அங்கு வாழ்ந்த சேரி வாழ் மக்களுக்கு வேதம் போதித்தார் என்பது உண்மை வரலாறு.

அன்றையச் சூழலில் இன்னொரு இஸ்லாமியக் கருத்தும் சிந்தனையும் அவரின் உள்ளத்தை ஈர்ப்பனவாயமைந்தன. ஒருவன் இஸ்லாத்தை ஏற்று இறைவன் ஒருவனே