பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

240


நெறிமுறைகளை தவிர்ப்பது இந்தியச் சமயங்களுக்கு இயலாததொன்றாகியது. அறிவுப்பூர்வமாக அவற்றை ஒதுக்க அல்லது தவறானவை எனக் காட்ட இந்தியச் சமயவாதிகளால் இயலவில்லை.

இஸ்லாத்தில் பிற சமயக் கருத்துகள் எதையும் புகுத்த இயலா விட்டாலும் இஸ்லாத்தின் கொள்கை, கோட்பாடுகளைத் தேவையான அளவுக்குச் சுவீகரித்துக் கொள்ள ஹிந்து சமயமும் ஹிந்து சமயத்தின் பல்வேறு பிரிவுகளும் தவறவில்லை.

இதனை வரலாற்றுப் பூர்வமாக "இண்டியன் ரிலிஜியன்ஸ்” எனும் ஆங்கில நூலில் டாக்டர் பர்த் எனும் ஆய்வறிஞர் சிறப்பாக அலசி ஆராய்ந்துள்ளார். இந்தியாவில் இருக்கக்கூடிய அத்தனை மதங்களைப் பற்றி, அவற்றுள் நடைபெற்ற கொடுக்கல் - வாங்கல் பற்றி, அவற்றில் காணும் சாயல்கள், ஒற்றுமை - வேற்றுமைகள் பற்றி மிகச் சிறப்பாக ஆய்ந்து எழுதியுள்ளார்.

பக்தி இயக்கமும் இஸ்லாத்தின் பங்களிப்பும்

இதையெல்லாம்விட நாம் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான செய்தி 'பக்தி இயக்க’ முயற்சியாகும். இஸ்லாமியக் கருத்துகளின்பால் ஈர்க்கப்பட்ட பல இந்து சமயப் பெரியார்கள் இந்து சமய மறு மலர்ச்சி ஏற்பட உழைக்கலாயினர். இந்த இயக்கம் இந்தியா முழுமையும் தன் செல்வாக்கைப் பதிக்கத் தவறவில்லை. இந்த இயக்கம் ஏற்பட முழு முதற்காரணமாயமைந்தவர்கள் இந்தியா முழுமையும் பரவியிருந்த இஸ்லாமியச் சூஃபிகளும், வலிமார்களுமாவர்.

முஸ்லிம்களின் ஆட்சி வடக்கே நிலை பெற்றிருந்த கால கட்டத்தில், முஸ்லிம் மன்னர்களோ ஆட்சியினரோ இஸ்லாமிய நெறி பரப்ப எந்த முயற்சியும் எடுத்தவர்-