பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/245

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

243


இணைத்துக் கொண்டவர்கள். இதன் மூலம் ஒருவித மறுமலர்ச்சிப் போக்கை ஹிந்து சமயத்தில் தோற்றுவிக்க முயன்று வெற்றி பெற்றவர்கள். இத்தகு முயற்சிக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பெரும் காரணமாக அமைந்தது இஸ்லாம் எனில் அஃது மிகையன்று.

சீர்மைச் சிந்தனை

இந்த பக்தி இயக்கத்தைத் தொடங்கி வைத்த பெருமைக்குரியவர் ராமானந்தர் ஆவார். இறைவனுக்கு உருவமில்லை; உருவமில்லாத இறைவனை மனத்தளவிலேதான் எண்ணிப் பார்க்க முடியும். மனித குலம் முழுமையும் ஒன்றுதான். நீங்கள் எந்தப் பெயரிட்டு வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளுங்கள். ராம் - ரஹீம் என்ற பெயர்களெல்லாம் ஒரே பரம்பொருளைக் குறிக்கும் வெவ்வேறு பெயர்களாகும். இத்தகைய கருத்துகள் மக்களிடையே மிகுந்த செல்வாக்குப் பெற்றன. இதனால் அவருடைய பக்தி இயக்கத்திலே பெருந்திரளாக இந்து சமயப் பெருமக்கள் இணைந்தார்கள். அவருக்குப் பின் கபீர் தாஸ், ராம தேவர், ராம் சாஹிப், புல்லா சாஹிப், கரீம் தாஸ் எனப் பெயரிட்டுக் கொண்டதனால் அவர்களை ஹிந்துவா, முஸ்லிமா எனக் கண்டறிய இயலாவண்ணம் தங்கள் பெயர்களை வைத்துக் கொண்டு இரு பெரும் சமயங்களிடையே இணைப்புப் பாலமாகவும் மக்களிடையே சமயப் பொதுமை உணர்வை உருவாக்கும் சமய சமரசவாதிகளாகவும் அமைந்தனர். அவர்கள் பேச்சிலும் எழுத்திலும் நீக்கமற நிறைந்திருப்பது இறைவனை ராம் என்று கூறினாலும் ரஹீம் என்று கூறினாலும் இறைவன் ஒருவனே; நாம் எப் பெயரிட்டு அழைப்பினும் இறைவனுக்கு உருவமில்லை; உருவ வணக்கம் அறவே கூடாது. மனத்தளவிலே இறை நம்பிக்கையோடு வணங்குதல் வேண்டும். ஏனெனில் இறைவனை மனத்தளவிலேதான் உணர முடியும். இறை-