பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

246


தரங்கை மத வேறுபாடின்றி மற்ற சமயத்தவர்களும் பங்கேற்கும் வகையில் நடத்தினேன். அதில் பங்கேற்ற டாக்டர் இரா. மாணிக்கவாசகம் என்பவர் பெரும் பேராசிரியர்; சித்தர்களைப் பற்றி ஆய்வு செய்து 'டாக்டர்’ பட்டம் பெற்றவர். அவர் “சித்தர்களும் சூஃபிகளும்” என்ற தலைப்பில் ஆய்வுரை நிகழ்த்துகையில், தன் ஒப்பீட்டாய்வின் பிழிவை, சுருக்கமாக மெய்ஞ்ஞானச் சிந்தனையைத் தொட்டவர்கள் சித்தர்கள்; அதன் கொடுமுடியாக சென்று, மெய்ஞ்ஞானத் துறையை நிறைவு செய்தவர்கள் இஸ்லாமிய சூஃபிகள் எனக் கூறினார்.

அப்போது எனக்கு ஒரு ஆசை எழுந்தது. இஸ்லாமிய மெய்ஞ்ஞானத் துறையைத் தமிழில் ஞானப்பாடல்கள் மூலம் பரப்பியவர்கள் எத்தனை பேர் என்பதை அறிய முயன்றேன். நண்பர் தக்கலை எம்.எஸ். பஷீர் அவர்களின் துணையோடு பட்டியல் தயாரிக்க முனைந்தேன். அப்போது சுமார் எழுபதுக்கு மேற்பட்ட இஸ்லாமியத் தமிழ் மெய்ஞ்ஞானிகள் தமிழில் சூஃபிப் பாடல்களை எழுதியதோடு, அவற்றைத் தமிழிலும் வெளியிட்டுள்ளனர் அல்லது அவை பிறரால் வெளியிடப்பட்டுள்ளன என்ற விவரம் தெரிய வந்தது. அவ்விவரங்களை ‘தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்’ என்ற நூலில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. இதிலிருந்து இஸ்லாமிய ஞானத்தை மெய்யறிவைத் திறம்பட தமிழ் மக்களிடத்தே சமய வேறு பாடின்றி எடுத்து விளக்க, தமிழ் இலக்கியப் போர்வையில் எவ்வகை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை உய்த்துணர முடிகிறது.

இந்நிகழ்வுகளெல்லாம் ஒரு பேருண்மையை நமக்குத் தெளிவாக்குகின்றன. அதுதான் 'இஸ்லாமிய நெறியைப் பரப்பியவர்கள், பெருமானாருடைய பெருமையை மக்களிடத்தே கொண்டு சென்று விளக்கியவர்கள், இறை நெறியை நிலை நாட்டியவர்கள் முஸ்லிம் மன்னர்களோ ஆட்சி அதிகாரமோ எதுவுமே இல்லை. இஸ்லாமிய