பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

249



இதனை இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ள இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்களால் எழுதப்பட்ட 'படைப்போர்' இலக்கியங்கள் வாழும் சான்றாகக் காட்சியளித்து வருகின்றன. போரையும், போருக்கான அடிப்படை அமைப்பான படையையும் பற்றியது 'படைப்போர்' இலக்கியங்கள்.

பிற சமயத்தினர் முஸ்லிம்கள் மீது தொகுத்த போர்களைப் பற்றிய செய்திகளே அதில் இடம் பெற்றுள்ளன. பிற சமயத்தினர் தாக்கும்போது அத்தாக்குதலை எதிர்த்து முஸ்லிம்கள் நடத்திய தற்காப்புப் போர்களே இவ்விலக்கிய நூல்களின் கருப்பொருள். மொத்த 18 படைப் போர் இலக்கியங்கள் தமிழில் உண்டு. ஆனால், ஒன்றிற்குக் கூட முஸ்லிம்களின் பெயர் இல்லை. அனைத்து இலக்கியத் தலைப்புகளிலும் நீக்கமற நிறைந்திருப்பவர்கள் முஸ்லிம்கள் மீது படையெடுத்த பிற சமயத்தைச் சார்ந்த கதாநாயகர்களே ஆவர். உச்சிப் படைப்போர், வடோச்சிப் படைப்போர், செய்யிதத்துப் படைப்போர் என இலக்கியத்துக்குக் கூட படை நடத்திய பகைவர்களின் பெயர்கள் உண்டே தவிர இஸ்லாமியப் பெயர் இல்லை. படைப்போர் இலக்கியத்தின் தலைப்பில் இடம் பெற்றவர்கள் அத்துனை பேரும் இஸ்லாத்தின் எதிரிகள். இஸ்லாத்தை அழிக்க வேண்டும், முஸ்லிம்களை ஒழிக்க வேண்டும் என்பதற் காகவே முஸ்லிம்கள் மீது படையெடுத்து வந்தவர்கள். எனவே, அவர்களின் பெயராலேயே இப்படைப்போர் இலக்கியங்கள் அழைக்கப்படலாயின. ஏனெனில், முஸ்லிம்கள் யாரையும் முதலில் தாக்குவதற்கு அறவே அனுமதி இஸ்லாத்தில் இல்லை.

சிந்துப் போரும் ஜிஹாதே

இந்தியாவில் முஸ்லிம்களுக்கும் மற்றவர்கட்கும் முதன் முதலில் நடைபெற்ற போர் சிந்துவில் நடைபெற்ற போராகும். இதைப் பற்றி நான் நிறைய ஆய்வு