பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

258

யானது மட்டுமல்ல வலுவற்றதுமாகும். மிகப் பெரும் வெடிச் சத்தத்தைக் கேட்க நேர்ந்தால் கிழிந்துவிடும் அல்லது வெடிப்போ கீறலோ விழுந்து விடும். அதன்பிறகு காது கேட்கும் சக்தி இல்லாமற் போய்விடும். இதன் செயல்பாட்டை இன்னும் தெளிவாகப் பார்ப்போம்.

காதின் உட்பகுதியில் செவிப்பறை அமைந்திருக்கும். நாம் பேசும்போது எழும் ஒலி செவிப்பறையைத் தாக்கும். அப்போது செவிப்பறை அதிர்வடையும். செவிப்பறை எந்த அளவிற்கு அதிர்கிறதோ அந்த அளவுக்கு அவ்வொலி அதிர்வலைகளாகச் செய்தி நரம்புகள் மூலம் மூளைக்கு அனுப்பப்படுகிறது. இது எப்படியென்றால் நான் இப்போது வானொலியில் பேசுவதாக வைத்துக் கொள்ளுங்கள், அப்பேச்சு உங்கள் காதுகளுக்கு நேரடியாக வருவதாக நீங்கள் கருதுகிறீர்கள். அதுதான் இல்லை. நான் வானொலியில் பேசும் பேச்சின் சொற்கள் எல்லாம் ஒலி அலைகளாக மாற்றப்பட்டு விண்ணில் அனுப்பப்படுகிறது. வானில் மிதந்துவரும் ஒலி அலைகள் 'ஆன்டென்னா' எனும் அலைவாங்கி மூலம் ஈர்க்கப்பட்டு அவ்வலைகள் மீண்டும் ஒலிகளாக மாற்றப்பட்டு வானொலி மூலம் ஒலிபரப்பப்படுகின்றது. இதே முறையில் தான் செவிப்பறை மூலம் ஒலி மூளைக்கு அனுப்பப்படுகிறது. இதயம் உட்பட உடலில் மாற்றுறுப்புப் பொருத்தும் தொழில் நுட்பம் வளர்ந்திருந்த போதிலும் பழுதடைந்த செவிப்பறைக்கு மாற்றாக வேறொரு செவிப்பறை பொருத்த இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

செவிப்பறை முற்றாகக் கெட்டுவிட்டது என்றால் அவனால் என்றைக்கும் எதையும் கேட்கவே முடியாது. அவன் டமாரச் செவிடாவதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால், அவனையும் கேட்கச் செய்ய முடியும் என்கிறார் அமெரிக்க விஞ்ஞானி டாக்டர் ஆர்லன் கார்னி. எப்படி?