பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/264

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

262

ஒட்டு மொத்த சமுதாய நலன் ஆண்-பெண் இருவரையும் சார்ந்தே உள்ளது. நாணயத்தின் இரு பக்கங்களாக அமைந்திருப்பவர்கள் இஸ்லாமிய ஆணும் பெண்ணும்.

வால்ட் விட்மன் கவிதை

அமெரிக்காவின் மாபெரும் புதுமைக் கவிஞனான வால்ட் விட்மன் தன் கவிதையில் ஆணையும் பெண்ணையும் பற்றி பாடும்போது

"Female is love and beauty
Male is power and action
Both are secred"

என்று இரத்தினச் சுருக்கமாகப் பாடினான்.

பெண் அன்பும் அழகுமாக இருக்கிறாள்
ஆண் சக்தியும் செயலுமாக இருக்கிறான்
இரண்டும் புனிதத் தன்மை வாய்ந்தவைகளே"

என்பது இதன் பொருள். இருபாலரின் தனித் தன்மைகளை இரத்தினச் சுருக்கமாக உணர்த்தியுள்ளார் கவிஞர் வால்ட் விட்மன். இஸ்லாத்தின் பிழிவாகவே இக்கருத்து அமைந்துள்ளது. அகவாழ்வின் செழிப்புக்கு அன்பும் அழகும் ஆதாரமாயமைகின்றன. புற வாழ்வின் வெற்றிக்குச் சக்தியும் செயலும் அடித்தளமாயமைகின்றன. இரண்டும் ஒன்றிணைந்ததே மனித வாழ்க்கை. இதில் ஒருவரை மிக உயர்ந்தவர்கள் என்றோ மற்றொரு பாலரை மிகத் தாழ்ந்தவர்கள் என்றோ கூற முடியாது. எனினும் மனிதனின்றும் பெண்ணை இறைவன் உருவாக்கிய காரணத்தால் கையில் கட்டை விரல் இருப்பது போன்ற நிலை சமூகத்தில் ஆண்மகனுக்கு உள்ளதே தவிர, வேறு எந்தத் தனிச் சிறப்பும் இறைவனால் வழங்கப்படவில்லை. எனவே, ஆணுக்கும் பெண்ணுக்கும் இஸ்லாம் சம நிலை தந்துள்ளது. மணம் முடிக்க விரும்பும் மணமகன் பெண்ணுக்கு மஹர் எனும்