பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

264



அண்மையில் எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவுக்குச் சென்றிருந்தேன். அரசு விருந்தாளி என்பதால் அங்குள்ள நட்சத்திர ஹோட்டலில் ஒரு வாரம் தங்க வைக்கப்பட்டிருந்தேன். என் தேவைகளைக் கவனித்துக் கொள்ள நியமிக்கப்பட்டிருந்த சேவகர் தேவைக்கு அதிகமாகவே என் மீது அன்பைப் பொழிந்தார். மூன்றாம் நாள் பேச்சு வாக்கில் சற்று தயங்கியவராக "என் திருமணத்திற்கு நீங்கள் உதவ வேண்டும்" என மிக பவ்வியமாகக் கேட்டுக் கொண்டார். எனக்குச் சரியாகப் புரியவில்லை. நம்மைப் பெண் பார்க்கச்சொல்கிறாரா அல்லது அவர் சார்பில் பெண் வீட்டாரிடம் பேசி முடிக்க அழைக்கிறாரா? என்று நான் எண்ணிக் கொண்டிருக்கும்போதே, ஒரு புன் சிரிப்பை உதிர்த்தவாறு சென்றுவிட்டார். மறுநாள் காலை நான் வெளியே புறப்படுவதற்குச் சுற்று முன்னதாக ஒரு அழகான இளம் பெண்ணை அழைத்து வந்து அறிமுகப்படுத்தும் வகையில், "இவள் என் உறவுக்காரப் பெண். இவளை நான் நிக்காஹ் செய்து கொள்ள விரும்புகிறேன். ஆனால், பெண் வீட்டார், பெண்ணுக்கு முப்பதினாயிரம் எகிப்திய டாலர்களை மஹராகக் கொடுத்தால், அவளை நிக்காஹ் செய்து கொடுப்பதாகக் கூறிவிட்டனர். உங்களைப் போன்ற வர்களின் உதவியோடு கடந்த ஓராண்டாக சுமார் இருபத்தியிரண்டாயிரம் எகிப்திய டாலர்களைச் சேர்த்து விட்டேன். இன்னும் எட்டாயிரம் டாலர்கள் சேர்த்து விட்டால் எங்கள் நிக்காஹ் இனிது நடந்து விடும்" என்று ஏக்கப்பெருமூச்சோடு கூறி நின்றார். அவர் கூறியதையெல்லாம் அப்படியே ஆமோதிப்பதுபோல் நாணத்தோடு தலையை மேலும் கீழும் லேசாக ஆட்டியபடி அந்நங்கை நின்று கொண்டிருந்தாள். ஒரு வித வெட்கத்தால் அவள் முகம் ஜிவ்வென சிவப்பேறியிருந்தது. அவர்கட்கு உதவி செய்ய விழைந்த நான் நூறு எகிப்திய டாலர் நோட்டை எடுத்து நீட்டியவாறு, "சக்திக்கேற்றவாறு தானே மஹர்த் தொகை வழங்க வேண்டும். உன் சக்திக்குமீறிய பெருந்தொகையைக் கேட்பது கொடுமையாக உள்ளதே?" எனக் கூறி, நான் சற்று