பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

265

அங்கலாய்த்தபோது, அவன் கூறிய பதில் என்னைத் தூக்கி வாரிப் போட்டது. "இப்பெண்ணுக்கு ஐம்பதினாயிரம் மஹர் கொடுத்து மணம் முடிக்க பல பேர் காத்திருக்கிறார்கள். இப் பெண்ணும் நானும் ஒருவரையொருவர் உள்ளன்போடு நேசிப்பதால் எனக்கு சலுகை காட்டும் வகையில் முப்பதாயிரம் மஹர் நிர்ணயித்துள்ளார்கள் என்று கூறி, நன்றி சொல்லி நகர்ந்தார்கள்.

இங்கு இஸ்லாத்துக்குப் புறம்பான கைக்கூலி முறை கொடுமைப்படுத்துகிறது என்றால், அரபு நாடுகளில் அனுமதிக்கப்பட்ட மஹர் தொகை அதிகரிப்பு ஏழை, எளியவர்களை வருத்துவதாக அமைந்துள்ளது. கைக்கூலி எனும் வரதட்சணை முறை ஒழிக்கப்பட வேண்டும். சக்திக்கு மீறிய முறையில் மஹர் வசூலிக்கும் போக்கு மட்டுப்படுத்தப்பட வேண்டும். இல்லையேல் இரு சாராருமே இறை தண்டனைக்கு ஆளாவதினின்றும் தப்ப முடியாது.

எந்தப் பொருத்தம்

நிக்காஹ் செய்ய விரும்பும்போது ஆணுக்கும் பெண்ணுக்கும் மனப் பொருத்தமும் குணப்பொருத்தமும் முதன்மையாகப் பார்க்கப் பட வேண்டும். அப்போது அவ்வாழ்க்கை செம்மையானதாக அமையவியலும்.

எனவே, இஸ்லாத்தை அண்ணலாரின் வழியாக, திருமறையின் வழிகாட்டுதலோடு பேணி நடக்க ஒவ்வொரு முஸ்லிமும் வாழக் கடமைப்பட்டுள்ளோம். அவ்வாறு வாழும் வாழக்கையே வெற்றிகரமானதாக அமையவியலும். அத்தகு உறுதியை பெருமானாரின் பிறந்த நாள் விழாவிலே ஏற்போமாக.

(17-7-98 அன்று துபாய் ஈ.டி.ஏ. அஸ்கான் நிறுவனக் கூடத்தில் நடைபெற்ற மீலாது விழா உரைச் சுருக்கம்)