பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/274

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

272


இவ்விரண்டு கோட்பாடுகளும் எப்படி ஒன்றாக முடியும்?

சுருங்கச் சொன்னால் 'எம்மதமும் சம்மதம்’ எனும் கோட்பாடு நீ தொப்பியும் வைத்துக்கொள்; நாமமும் தரித்துக் கொள்; பொட்டும் வைத்துக் கொள்; பட்டையும் தீட்டிக் கொள் என்று சொன்னால் அத்தோற்றம் எவ்வளவு விகாரமாக இருக்குமோ அதைப் போன்றதுதான் இக் கோட்பாடு. இந்த நவீன காலத்தில் தங்கள் பரந்த மனப்பான்மையை, விரிந்த கண்ணோட்டத்தை வெளிப்படுத்த, சமய சகிப்புத்தன்மையோடு ஒருங்கிணைந்து வாழ முயற்சிப்பது போல, சமய நல்லிணக்கத்தைத் தூக்கி நிறுத்த முயல்வது போன்ற தோற்றத்தை உண்டு பண்ண, குறிப்பாக ஆழ்ந்த சிந்தனையோ அனுபவமோ அற்ற இளைஞர்களை ஈர்க்க இக்கோட்பாடு அடிக்கடி முழங்கப்படுகிறது.

அதைவிடச் சிறந்த கோட்பாட்டை இஸ்லாம் உலகுக்கு வழங்கிக் கொண்டுள்ளது. அதுதான் “உங்கள் மதம் உங்களுக்கு; எங்கள் மார்க்கம் எங்களுக்கு” என்ற முழக்கம்.

எல்லா மதத்தையும் நாம் மதிப்போம். மதிப்பது வேறு, ஏற்று நடப்பது வேறு.

எல்லா மதங்களும் இறைவனால் வழங்கப்பட்டவைகளே. அனைத்து வேதங்களும் இறைவனால் தரப்பட்டவைகளே. ஆனால், அனைத்து மதங்களும் வேதங்களும் மனித விருப்பு வெறுப்புகளுக்கேற்ப மாற்ற திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டுவிட்டன. இதனால் அவை தங்கள் தனித்துவத்தை இழந்து பாதை மாறி இருட்கிடங்குகளாக மாறிவிட்ட நிலையில் அவையும் ஒளிப்பிழம்பாயுள்ள மார்க்கமும் ஒன்றே என்பது ஏற்கத் தக்கதன்று. ஆனால், அனைத்து மதங்களும் வேதங்களும் இறைவனால் வழங்கப்பட்டவை என்ற உண்மையை ஏற்பதில் எந்தத் தயக்கமும் இல்லை. அதற்காக பிற மதங்களை வெறுக்க வேண்டுமென்பதில்லை. அப்படி