பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

274

சமயங்களயும் அனைத்து வேதங்களையும் மதிக்க வேண்டும் என்பது நபிகள் நாயகம் (சல்) அவர்கள் கற்றுத்தந்த பாடமும் கூட. இதைத் தெளிவாக விளக்கவல்ல நிகழ்ச்சியொன்று பெருமானாரின் பெருவாழ்வில் நடைபெற்றதாக வரலாறு பதிவு செய்துள்ளது.

அபூபக்ர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தில் இணைந்ததைத் தொடர்ந்து அவரது அன்பு மகள் அஸ்மாவும் இஸ்லாத்தில் இணைந்தார். ஆனால், அஸ்மாவின் தாயார் இஸ்லாத்தில் இணையாமல் சிலை வணக்கச் சமயத்திலேயே இருந்தார். ஆகவே, அவரோடு இணைந்து ஒரே வீட்டில் வாழவிரும்பாமல் தந்தையும் மகளும் தனியே வாழ்ந்து வந்தனர்.

ஒரு சமயம் அஸ்மாவின் தாயார் தன் அன்பு மகளைப் பார்க்க பரிசுப் பொருளோடு வந்தார். அவர் வாசற்படியில் கால் வைக்கும் முன்பே தன் தாயாரைப் பார்க்க விரும்பாத மகள் அஸ்மா கதவை அடைத்துத் தாளிட்டு விடுகிறார். தன் அன்பு மகளைப் பார்த்து, பரிசுப் பொருள் தந்து மகிழ்வித்து உறவாட வந்தவருக்கு பெரும் மன வருத்தம் ஏற்பட்டாலும் மகள் மனம் மாறி தாயின் மீது அன்பு சுரக்கும் என்ற நம்பிக்கையில் வாயிலில் காத்திருந்தார்.

இச் செய்தி உடனடியாகப் பெருமானார் காதுகளுக்கு எட்டியது. மாற்று மதத்தைச் சார்ந்தவர் என்பதற்காகத் தன் தாயாரை வெறுப்பது பெரும் தவறு என்பதை அஸ்மாவை அழைத்து உணர்த்துகிறார். தாய் என்பதற்காக மட்டும் அல்ல, சகோதர சமயத்தைச் சார்ந்தவரை மதிப்பதும் ஒரு முஸ்லிமின் இன்றியமையாக் கடமை என்பதை அஸ்மாவுக்கு உணர்த்தி, சகோதர சமயத்தைச் சார்ந்த தாயாரை வரவேற்று கண்ணியப்படுத்தச் செய்தாரென்றால் ஒரு முஸ்லிம் பிறமதத்தவர்களை மதிக்க வேண்டும் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகவே அமைந்துள்ளது என்பதை உணர்ந்து தெளியலாம்.