பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

277

தவர்களோடு நட்புணர்வு பாராட்ட வேண்டும் என்பது இஸ்லாமியக் கோட்பாடு. உயிர் சிநேகமாக நாம் எந்தச் சமயத்தைச் சார்ந்தவரோடும் இருக்க முடியும். மதம் வேறு, நட்பு வேறு. இதற்கு வாழும் சான்றாக விளங்குவது தேசிங்கு ராஜன் மஹ்மூத் கான் நட்புணர்வு. இவர்களின் நட்பு, நட்புக்கே இலக்கணமாகும். மஹ்மூத் கானின் திருமணம் நடந்து கொண்டிருக்கிறது. தாலி கட்டும் நேரம். படையெடுப்பு என்று செய்தி வருகிறது. தாலி கட்டியவுடன் மனைவி முகத்தைக்கூட காணாமல் நண்பன் தேசிங்கு ராஜனோடு போர்முனை புகுந்தான் என்பது வரலாறு.

மனிதத்துவத்திற்கே மரியாதை

மதம், ஜாதி, இனம், மொழி பார்க்காமல் மனிதன் என்ற அளவில் பார்க்கச்சொல்வது இஸ்லாம். அம்மனிதனிடம் மனிதத்துவம் இருக்கிறதா? எனக் கவனிக்கச் சொல்வது இஸ்லாம். அப்படியிருந்தால் அவனிடத்தில் அன்பு, பாசம் காட்டப் பணிப்பது இஸ்லாம். இதற்கு மதுரை மன்னன் ஜாதவர்மன் சுந்தரபாண்டியனும் அவன் படைத்தளபதி சையத் தகியுத்தீன்கானும் வாழும் சான்றாக வரலாற்றில் மின்னிக்கொண்டுள்ளார்கள்.

பாண்டிய மண்டலத்தின் கடைசி மன்னனாக மதுரையிலிருந்து ஆட்சி செய்தவன் ஜாதவர்மன் சுந்தரபாண்டியன். அப்போது அவன் படைத்தளபதியாகப் பணியாற்றிக் கொண்டிருந்தவர் சையத் தகியுத்தீன் கான் எனும் முஸ்லிம். இஸ்லாத்தை உணர்ந்து தெளிந்தவர்; அதன் கொள்கை, கோட்பாடுகளை இம்மியும் பிசகாமல் கடைப்பிடித்து வாழும் பெற்றியினர். அப்போது பாண்டிய மன்னனின் தளபதியாக மட்டுமல்லாது முதன் மந்திரியாகவும், தலைமை ஆலோசகராகவும் பணியாற்றியவர். அவரை நம்பி நாட்டையே அவரிடம் ஒப்படைத்திருந்தான் ஜாதவர்மன் சுந்தர பாண்டியன். அப்போது பாண்டிய நாட்டின் மீது படையெடுக்க முனைகிறான் மாலிக்கபூர். படை புறப்படுமுன்