பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

278

பாண்டிய நாட்டின் தலைமைத் தளபதியும் தலைமையமைச் சருமான தகியுத்தீனுக்கு ஒரு இரகசிய செய்தி அனுப்புகிறான். "நீயும் முஸ்லிம் நானும் முஸ்லிம். நான் படை யெடுத்து வருகிறேன். அப்போது நீ என் படையை எதிர்த்து போரிடாது ஒதுங்கிக் கொள். பாண்டிய நாட்டைக் கைப்பற்றி உன்னிடத்தில் ஒப்படைத்துவிடுகிறேன்” என ஆசைக் காட்டி ஓலை அனுப்பினான்.

செய்தி பெற்ற தகியுத்தீன் கொதிப்படைகிறார். இஸ்லாமிய நெறிக்குப் புறம்பாக ஆதிக்க வெறிபிடித்த மாலிக் காபூரின் இழிசெயலைக் கண்டு, கடுஞ்சினத்துடன் பதில் மடல் வரைகிறார். "இது ஒரு முஸ்லிம் செய்யும் இழி செயல். நான் இந்தப் பாண்டிய நாட்டின் உப்பைத் தின்று கொண்டிருப்பவன். இங்கு வீசும் காற்றைச் சுவாசித்து வாழ்பவன், நான் இந்த மண்ணுக்கு நன்றியுள்ளவனாக இருப்பேனே தவிர, முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக உனக்குச் சாதகமாக நடந்து கொள்வேன் என்று கனவிலும் கருதாதே. நீ இப்படி எண்ணிய மறு விநாடியே 'முஸ்லிம்' என்ற உன்னத இடத்தை இழந்துவிட்டாய். அவ்வாறு இழக்க நான் விரும்பவில்லை. எனவே உன் படைகளைப் போர்க்களத்தில் சந்திப்பேனே தவிர நீ கருதுவது போன்று இஸ்லாத்துக்குப் புறம்பான, நன்றி கெட்ட இழி செயலில் ஈடுபடமாட்டேன். போர்க்களத்தில் உன்னை சந்திக்க விழைகிறேன்” என மடல் வரைந்து, இன்று வரை நட்புக்கும் நன்றியுணர்வுக்கும் வாழும் எடுத்துக்காட்டாக வரலாற்றில் திகழ்கிறார் சையத் தகியுத்தீன் கான்.

அன்று மட்டுமல்ல ; இன்றும்

அன்று பாண்டிய நாட்டின் பாதுகாப்புக் கேடயமாக தகியுத்தீன் விளங்கியது போன்று இன்று இந்தியாவின் முழுப் பாதுகாப்புக்கும் அறிவியல் பூர்வமான பாதுகாப்புக் கேடயமாக விளங்குகிறார் இந்திய ஏவுகணை பிதாமகர் பாரத