பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

280

முடியும். ஆனால் அவ்வாறு செய்ய அவர் அறவே விரும்பவில்லை. பின் என்ன செய்தார்?

தன் வாளை முறைப்படி பெற நீதி மன்றத்தை அணுகுகிறார்.

“என் இரட்டை வாளை யூதர் ஒருவர் கைப்பற்றி தன் வசம் வைத்துள்ளார். அந்த வாளை, நீங்கள் விசாரித்து, வாங்கித் தர வேண்டும்"

என்று நாட்டையே ஆளும் கலீஃபா சாதாரண குடிமகனைப் போன்று நீதி மன்றத்தை அணுகி நீதி கேட்கிறார்.

அவ்வழக்கு மன்றத்தின் நீதிபதியாக ஹாரிஸ் என்பவர் இருக்கிறார். வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி வாதி, பிரதிவாதி இருவரை ஒருசேர வழக்கு மன்றம் அழைத்து விசாரணை நடத்துகிறார்.

யூதரிடம் இருப்பதாகக் கூறும் வாள் உங்களுடையது தான் என்பதற்கு ஆதாரம், சாட்சி கேட்கிறார் நீதிபதி ஹாரிஸ். உடனே அலீ (ரலி) என் மகனை அழைத்துக் கேளுங்கள் என்று கூறுகிறார். தந்தையின் வழக்கில் பிள்ளையின் சாட்சியை ஏற்பதற்கில்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்கிறார். வேறு வழியின்றி நீதிபதியின் தீர்ப்பை ஏற்று கலீஃபா அலீ (ரலி) வழக்கு மன்றத்தை விட்டு வெளியேறுகிறார்

நாட்டை ஆளும் கலீஃபாவாக இருந்தும் சாதாரண குடிமகனைப் போல் கோர்ட்டில் வழக்குத் தொடுத்ததும், போதிய சாட்சியமில்லா நிலையில் நீதிபதி தந்த தீர்ப்பை ஏற்றுக் கொண்டதும் யூதரின் மனச் சாட்சியை உறுத்தத் தொடங்கியது. கலீஃபா நினைத்திருந்தால் என்னை அடித்தோ உதைத்தோ வாளை கைப்பற்றியிருக்க முடியும். ஆனால், சரியோ தவறோ நீதிக்கு மரியாதை கொடுத்த அலீ (ரலி) அவர்களின் செயல்பாட்டைக் கண்ணுற்ற யூதர்,இவ்வளவு உயர்ந்த உத்தமரின் புகழ்மிக்க உடமையான இரட்டை