பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

282


வழக்குமன்ற விசாரணைக்குப் பின் ஷரீயத் சட்ட அடிப்படையில் தன் மனைவியென்றும் பாராமல் மரணதண்டனை விதிக்கிறார் மாமன்னர் ஜஹாங்கீர். ஒருவரைக் கொன்றுவிட்டால், கொன்றவர் மரண தண்டனைக்கு உட்பட வேண்டும் என்பது ஷரீயத் சட்டம். ஆனால், அவரைச் சுற்றியிருந்த அரசு அதிகாரிகளுக்கு இத்தீர்ப்பு அதிர்ச்சியளித்தது. தன் அன்பு மனைவி, தன்னைவிட ஆற்றலுள்ள பெண்மணி, அரசுக்கு வழிகாட்டியாக விளங்கவல்ல திறனாலி மரண தண்டனைபெறுவதை விரும்பவில்லை. ஏதேனும் ஒரு வகையில் தண்டனையைக் குறைக்கச் செய்யுமாறு மாமன்னரை வேண்டுகின்றனர். இஸ்லாமிய நீதி காப்பதில் கண்ணுங்கருத்துமாக இருந்த ஜஹாங்கீர் மாமன்னர் சட்ட அறிவு நிறைந்த முஸ்லிம்களையும் இஸ்லாமிய ஞானமிக்க வரையும் ஒருசேர அழைத்து ஷரீயத் சட்டப்படி ஏதேனும் விதி விலக்கு அளிக்க முடியுமா என ஆராயச் சொன்னார். விதி விலக்கு இல்லையெனில் மரண தண்டனையை நிறைவேற்றப்பட வேண்டும் எனக் கூறினார்.

ஷரீயத் சட்ட நுணுக்கங்களையெல்லாம் அலசி ஆராய்ந்த போது, 'யார் கொல்லப்பட்டாரோ, அவருடைய அடுத்த வாரிசு, கொன்றவர்க்கு மரண தண்டனை கொடுக்க வேண்டாம், அத்தண்டனைக்குப் பரிகாரமாக பிணையத் தொகை கொடுத்துவிட்டால், மரண தண்டனை பெற்ற தண்டனையாளியை விடுதலை செய்து விடலாம்' என்ற விதி விலக்கை எடுத்துக் கூறினார்கள். உடனே மன்னர் ஒரு கட்டளையைப் பிறப்பிக்கிறார்.'ஆட்சியாளர்கள் யாரும் இறந்தவரின் வாரிசான அவர் மனைவியை அணுகி பிணையத் தொகையைப் பெற்றுக் கொண்டு அரசிக்கு விடுதலை வழங்குமாறு எக்காரணம் கொண்டும் கோரக் கூடாது. அந்தப் பெண்ணாக முன்வந்து யாருடைய வற்புறுத்தலும் இல்லாது, 'பிணையத் தொகையை வாங்கிக் கொண்டு கொலையாளியை விடுவிக்கிறேன்' எனக் கூறினால்