பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

287

யிடுகிறார். 'எனக்குப் பெருமானார் (சல்) அவர்களால் அளிக்கப்பட்ட நிலம் அது. அதில் யாரோ ஒருவர் பயிர் செய்து கொண்டுள்ளார். அதனை மீட்டுத்தர வேண்டும் என்று கோரியபோது 'உழுபவருக்கே நிலம் சொந்தம்' என்ற சட்டம் அமுலிலிருந்தும் அதைத் தெரிந்து கொள்ளாமல், அமுல்படுத்தாமல் இருந்தால் நீங்கள் அந்தச் சட்டத்தை மதிக்கவில்லை என்பது தானே பொருள். இந்தச் சட்டத்தை நீங்கள் பின்பற்றாததால் பயிரிடக் கூடிய ஒருவருக்குச் சட்டப்படி அந்நிலம் உடமையாகி விட்டது' எனக் கூறி அனுப்பி விட்டார் என்பது வரலாற்றுக் குறிப்பு.

அது மட்டுமல்ல, மக்கா நகரத்திலும் மதினா நகரத்திலும் ஒருவருக்கு ஒரு வீடுதான் சொந்தமாக இருக்கலாம். இரண்டு வீடுகள் இருந்தால், மற்றொரு வீடு, வீடற்றவருக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்பன போன்ற பல புரட்சித் திட்டங்களை, சமதர்மப் பொதுவுடைமைப் பொருளாதாரக் கொள்கைகளை செயல்படுத்தியவர் உமர் (ரலி) அவர்கள்.

அதனால், விடுதலைப் போராட்ட காலத்திலேயே, அண்ணல் காந்தியடிகள் 'நாடு விடுதலை பெற்றவுடன் உமர் அவர்களின் ஆட்சி முறை இந்தியாவில் அமைய வேண்டுமெனக் கனவு காண்கிறேன்’ என்று கூறினாரென்றால் இஸ்லாமிய நெறிமுறைகள் எவ்வளவு உன்னதமானவை என்பதை நாம் உணர்ந்து தெளியலாம்.

இஸ்லாத்தின் ஐம்பெரும் கொள்கைகளில் ஒன்றான ஜகாத் முறை இன்றையப் பொருளாதார பேரறிஞர்களை வியப்பிலாழ்த்தும் கோட்பாடாக இருந்து வருகிறது.

ஒவ்வொரு முஸ்லிமும் தன் வருமான நிகரத் தொகையிலிருந்து இரண்டரைச் சதவீதத்தை ஏழை எளியவர்களின் பங்காக, தானே கணக்கிட்டு, தன் கையாலேயே இடது கைசெய்வது வலது கைக்குக்கூட தெரியாது, விளம்பரம் ஏதுமின்றி அளிப்பது, அற்புதமான பொது