பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

288

வுடைமைத் திட்டமாகும். எந்த வகையிலும் பொருள் குவிவதைத் தடுக்கும் அருமையான சமதர்மத் திட்டமாகும்.

இன்றையப் பொருளாதாரக் கொள்கைகளின் போக்கு என்ன?

அமெரிக்கா போன்ற மேலை நாடுகள் கடைப்பிடிக்க விழைவது முதலாளித்துவ பொருளாதார முறை. இக் கொள்கையில் மையமாக அமைவது மனிதனை முதலுக்கு அடிமையாக்கும் போக்காகும்.

சீனா போன்ற பொதுவுடைமைக் கொள்கை பேசும் நாடுகளில் இக் கொள்கையின் மையமாக அமைவது என்ன? மனிதரை உழைக்கும் வர்க்கம் என்ற போர்வையில் அரசுக்கு, அரசின் கொள்கை, கோட்பாடுகளுக்கு அடிமைப்படுத்துவதுதான். மனிதன் கடுமையான அரசுக் கட்டுப்பாட்டு விதிகளுக்குட்பட்டவனாக எந்திரத்தோடு எந்திரமாக மாறுவதற்கு மேல் அவனுக்கு எந்தத் தனிச் சுதந்திரமுமில்லா நிலை.

அதே சமயத்தில் இஸ்லாத்தின் சமூக, பொருளாதாரக் கொள்ககைள் மனிதப் புனிதமாக மாறி, அதன்விளைவாக இறைவனின் இனிய அடிமையாக மாறி, வாழ்வு பெற்றதின் முழுப் பயனை இம்மையிலும் மறுமையிலும் பெறக் கூடிய பேறு பெறுகிறான்

இறைவனால் படைக்கப்பட்ட மனிதன், இறைவனுக்கு நன்றி கூறி, வல்ல அல்லாஹ்வின் அடிமையாக வாழ்வதன் மூலம் இந்த உலக இன்பத்தை விட பல கோடி மடங்கு மறுமைப் பேரின்பத்தை நிலையாகப் பெறக் கூடியவனாகிறான். அதற்கான பயிற்சி பெறும் களமாக அமைந்திருப்பதே இவ்வுலக இஸ்லாமிய வாழ்கை முறை. அதற்கு வழிகாட்டும் ஒளி விளக்காக அமைந்திருப்பதே அண்ணலாரின் வாழ்வையும் வாழ்க்கையும் விரித்துரைக்கும்