பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

291

யோடு பரப்பப்பட்டது என்பது வடிகட்டின புனைந்துரை. இன்று தமிழகத்தில் வாழும் ஒரு முஸ்லிமைப் பார்த்து “நீங்கள் யார்?” எனக் கேட்டால், அவர் உடனடியாகக் கூறும் பதில் “நான் ஒரு இஸ்லாமானவன்” என்பதாகவே இருக்கும். இஸ்லாம் ஆனவனே தவிர, இஸ்லாம் ஆக்கப்பட்டவன் இல்லை. ஏனெனில், இஸ்லாத்தில் நிர்ப்பந்தம் என்பது அறவே இல்லை என்பது திருமறை தரும் இறை வாக்காகும்.

எனவே, இஸ்லாத்தை, இறை நெறியை அன்பு வழியில், இஸ்லாமல்லாதவர்களின் உள்ளம் ஏற்கும் வண்ணம் எடுத்துக் கூறி விளக்குவதில் தவறில்லை. ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொள்ளவும், ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள தப்பான எண்ணங்களும் தவறான உணர்வுகளும் மறையவும் சரியான தகவல்களும் கருத்துகளும் சென்று நிலை பெறவும் வாய்ப்பாக அமையும். எனவே, இஸ்லாத்தைப் பற்றி முஸ்லிம்களோடு மட்டுமே பேசுவதோடமையாது. முஸ்லிமல்லாதவர்களிடமே அதிகம் விளக்கிக் கூற வேண்டிய கடப்பாடு நமக்கு உண்டு.

பெருமானாரும் இஸ்லாமியப் பிரச்சாரமும்

பெருமானார் (சல்) அவர்கள் இஸ்லாத்தைப் பற்றி விளக்கும் பணியை முஸ்லிம்களுக்கு மத்தியில் மட்டும் விளக்குவதை நோக்கமாகக் கொண்டிருந்திருந்தால், அது மக்காவுக்குள் முப்பது முஸ்லிம்களோடு முடங்கிப் போயிருந்திருக்கும். ஆனால், அவர் முஸ்லிம் அல்லாதவர்களிடையே இறை நெறியாகிய இஸ்லாமிய நெறியை எடுத்துச் சொல்லி விளக்கியதன் விளைவாகத்தான் விரைந்து பரவி வளர முடிந்தது.

அவர் வழியைச் சார்ந்த நாமோ இன்னும் ஒருபடி மேலே போய் இஸ்லாமிய நெறியை முஸ்லிமல்லாதவர்களிடையே, முஸ்லிமல்லாதவர்களைக் கொண்டே திருமறைக் கோட்பாட்டிற்கிணங்க அன்பு வழியில்