பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

296

கொள்கை, கோட்பாடுகளைப் பற்றி கூறிய அனைத்தும் எனக்குப் புதியதாகவும் சிந்திக்கத் தூண்டுவதாகவும் இருந்தது. முஹம்மதலி தன் பேச்சினூடே அடிக்கடி பிலால் என்ற பெயரைக் கூறினார். நான் ஒரு முறை வாஷிங்டன் சென்று அங்குள்ள இஸ்லாமிக் ஸ்டடி சென்டரில் இருந்து பிலால் பற்றிய நூல் ஒன்றை வாங்கி வந்தேன். அதைப் படித்து முடித்தபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கும் வியப்புக்கும் அளவே இல்லை.

சுமார் ஆயிரத்து நானூறு ஆண்டுகட்கு முன்பு கறுப்பு இனத்தவரை மிருகங்களோடு மிருகமாகக் கருதி கூட்டங்கூட்டமாகப் பிடித்து விற்பனை செய்யப்பட்ட கால கட்டத்தில், அடிமைகளாக வியாபாரப் பொருளாகக் கருதி ஏலம் போட்டு விற்கப்பட்ட கறுப்பர் இனத்தைச் சேர்ந்த பிலால் எனும் கறுப்பரை விடுவித்து, முழு விடுதலை வழங்கியதோடு, இஸ்லாமிய வரலாற்றில் முதன் முதலாக தொழுகை அழைப்பான பாங்கு ஒலி எழுப்ப பிலால் அவர்களையே பெருமானார் அவர்கள் தேர்ந்தெடுத்தார். மற்றவர்க்குச் சமமாக மட்டுமல்ல சற்று மேலான அந்தஸ்தையே எங்களுக்கு வழங்கிய இந்த இஸ்லாமிய மார்க்கம் தான் மனிதர்களை, மனிதப் புனிதர்களாக்கும் மார்க்கமெனத் தெளிந்து அதில் இணைந்தேன். நான் முன்பு இருந்த மதத்தில் பெற முடியாத மதிப்பும் மரியாதையும் இப்போது கிடைக்கிறது. சட்டத்தில் சமம் என்றிருந்தாலும் கறுப்பன் என்பதற்காக சமநிலையில் மதிக்கத் தயங்கிய வெள்ளை அமெரிக்கர்கள் இப்போது சமமாகப் பழகுகிறார்கள்; மதிக்கிறார்கள். இப்போது என் உறவினர் குடும்பங்களும் இஸ்லாத்தில் இணைந்து முஸ்லிம்களாகி வருகின்றன. நம்மை முழுத் தகுதி பண்டத்த மனிதர்களாக மற்றவர்கள் கருதி, இஸ்லாமே வழி என்பதை அமெரிக்கக் கறுப்பர் இனமே இன்று உணரத் தலைப்பட்டுள்ளது” என ஒரு குட்டிப் பிரசங்கமே செய்தார். அப்போது இனங்காணாத மகிழ்ச்சிப் பெருக்கு அவரிடம் கண்ணீர்த் தேக்கமாய்க்