பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

303


கர்த்தாவா? த்ரஷ்டாவா?

மேலும் இந்து சமயத்தில் சிவனும் விஷ்ணுவும் பெருங் கடவுளர்களாகக் கருதி பிற்காலத்தில் வணங்கப்பட்டாலும் கூட, அவர்கள் தங்களுக்கு மூலமான ஓர் பரம்பொருளை வணங்குவதாக சிவபூசை போன்ற புராணச்செய்திகள் கூறுவதிலிருந்து, எல்லாவற்றிற்கும் மேலான ஓர் சக்தியை-பரம்பொருளையே எல்லோரும் வணங்கி வந்தனர் என்பது தெளிவாகிறது. இதிலிருந்து இவர்களெல்லாம் இறை தூதர்களாக வந்தவர்கள்; பின்னர் கடவுளர்களாக்கப்பட்டனர். இறைத் தூதர்களாக வந்தவர்கள் தொடக்கத்தில் ஒரே இறைவனை வணங்கப் பணித்தனர். அவர்கள் பெற்ற வேதமும் ஒரே இறைவணக்கத்தையே போதித்தது. இறை தூதர் மறைவுக்குப்பின் அவர் மீதுகொண்ட அபரிமிதமான அன்பாலும் மதிப்பாலும் அவர்மீது அதீதமான ஆற்றல்களையும் சக்தியையும் ஏற்றிப் புகழ்வர். இதற்கேற்ப அவரவர் திறமைக்கேற்ப புதிய புதிய அதிசய செய்திகளைப் புனைந்துரைகளாகப் புகுத்துவர். இறை தூதரையே இறைவன் நிலைக்கு உயர்த்தி, வணங்கத் தலைப்படுவர். இறைத்தூதர் எந்தக் கடவுளை வணங்கப் பணித்தாரோ அந்த இறைவனின் இடத்தைத் தூதர் பெறுவார். அத்தூதர் மூலம் இறைவன் அளித்த வேதம், தூதர் கடவுளாக்கப்பட்டபின், ‘வேத விளக்கம்' என்ற பெயரில் அவ்வேதம் எல்லாவகையான மாற்ற திருத்தங்களுக்கும் ஆட்பட அதன் அடிப்படை அம்சம் தலைகீழ் மாற்றத்திற்கு ஆளாகி விடும். இதுதான் இறை தூதர்களின் வரலாறாகவும் இறை வேதங்களின் போக்காகவும் இருந்து வருகிறது.

ஒவ்வொரு இறை தூதரும் வேதத்தைப் பெற்ற வரலாறு மிகவும் சுவையானது. வேத வரலாற்றை நுட்பமாக ஆய்ந்து பார்த்தால் வேத மந்திரங்கள் எவ்வாறு உருவாயின என்பது தெளிவாகும். வேத வரலாற்றை கூற வந்த சங்கராச்சாரியார் வேதங்களை ரிஷிகள் உருவாக்க(கர்த்தாக்கள்)வில்லை.

20