பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

305

ஜிபுரீல் (அலை)மூலம் கேட்டதும் இதே முறையில்தான். மூல வடிவிலான இறைச் செய்தி நாளடைவில் மனிதர்களால் மாற்ற திருத்தங்களுக்கு உட்படுவதால் மீண்டும் மூலவடிவிலேயே அவ்வேதம் இறைத்தூதர் ஒருவருக்கு இறைவனால் வழங்கப்படும் என்பது தான் வேத வரலாறு. எனவே, உலகுக்கு இறைவனால் வழங்கப்பட்ட அனைத்து வேதங்களின் அடிப்படை ஒன்று போலவே இருக்கின்றன. இதை உறுதிப்படுத்தும் வகையில் இறைவன் தன் திருமறையாம் திருக்குர்ஆனில், நபிகள் நாயகம் (சல்) அவர்களிடம் கூறும் முறையில்,

"(நபியே!) உமக்கு முன் வந்த இறைதூதர்களுக்குக் கூறப்பட்டது எதுவோ அதனையேயன்றி வேறொன்றும் உமக்குக் கூறப்படவில்லை”

(திருக்குர்ஆன் 41-43)

இதிலிருந்து இறை தூதர்களின் காலம் வெவ்வேறாக இருந்தாலும் தோன்றிய நாடும், மொழியும் இனமும் வெவ்வேறாக இருந்தாலும் அவர்கள் வாழ்ந்த சமுதாயச் சூழல் வெவ்வேறாக இருந்தாலும், அவர்களுக்கு இறைவனால் வழங்கப்பட்ட வேதங்களின் அடிப்படை மட்டும் ஒரே மாதிரியுள்ளன.

இறை காக்கும் இறுதி வேதம்

அண்ணலாருக்கு முன்னர் வந்த இறை தூதர்களின் வாழ்வும் வாக்கும் அவர்கள் பெற்ற வேதங்களும் மனிதர்களால் மாற்ற திருத்தங்களுக்கு உட்பட்டு மாசுபட்ட போதிலும் இறுதி நபிக்கு வழங்கப்பட்ட இறுதி வேதமான திருக்குர்ஆன் எவ்வித மாற்றங்களுக்கும் உட்படா நிலையில், ஒரு சொல்லும் எழுத்தும் கூட மாறாமல் இன்றும் மூலவடிவிலேயே இருப்பதற்கு அடிப்படைக் காரணம், முந்தைய வேதங்களைக் காக்கும் பொறுப்பை இறைவன் மனிதர்களிடம் ஒப்படைத்திருந்தான். மாற்றதிருத்தங்