பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

308

தொடர்பு வந்து சேர்ந்து விடக்கூடாது என்பதற்காகவே இறைவன் அவரை உம்மி நபியா, கல்வி கற்காதவராக இறுதிவரை வைத்திருந்தான்.

இறைவனே குரு

இதில் உள்ள மற்றொரு சிறப்பையும் நாம் எண்ணி வியக்க வேண்டும். நாயகத் திருமேனிக்கு மனிதன் குருவாக அமையாவிட்டாலும் வானவர் தலைவர் ஜிபுறீல் (அலை) அவர்கள் மூலம் இறைவனே குருவாக அமைந்துள்ளார். இறைவன் வானவர் தலைவர் வாயிலாக இறுதித் திருமறையை, இறைக் கட்டளைகளை, அறிவுச் செல்வங்களை வாரி வழங்கினான். இவ்வாறு இறைவனையே குருவாகப் பெறுகின்ற பேறு அண்ணாலாருக்கு மட்டுமே வாய்த்தது.

அண்ணலார் படிக்காத 'உம்மி' நபியாக இருந்த போதிலும் அவருக்கு வஹீயாக இறங்கிய முதல் வாசகமே 'இக்ரஉ' அதாவது 'ஓதுவீராக’, 'படிப்பீராக’, ‘கற்பீராக’, ‘தெரிந்து கொள்வீராக’ என்பதாகத்தான் இருந்தது. அது மட்டுமல்ல, திருக்குர்ஆனின் முதல் அத்தியாயமே 'அல் கலம்' அதாவது எழுதுகோல் என்பதாகும். எழுது கோலைக் கொண்டு கற்பீராக எனத் திருமறை தொடங்குவதால் முதல் இறைச் செய்தியாக அறிவைப் பற்றி, அதைப் பெறுவதற்கான வழிவகைகளைப் பற்றியதாகவுமே அமைந்துள்ளது.

மொழியின் தனித் தன்மை

கல்வி என்பது வெறும் ஏட்டுக் கல்வி மட்டுமல்ல, அனுபவ அறிவும் கல்வியின்பாற்பட்டதுதான். இந்த அனுபவப்பூர்வமான அறிவு, சிந்தனை, எழுத்து மொழி மூலம் பதிவு செய்து வைக்கப்படுகிறது. அதைப் பலநூறு ஏன், பல்லாயிரம் கல் தொலைவுக்கப்பால் உள்ளவர்களும், இன்னும் பலநூறு ஆண்டுகட்குப் பின்னால் வரக் கூடியவர்களும் அவற்றைப் படித்துணர்ந்து பலன் பெறுகிறார்கள். இதற்கெல்லாம் ஆதாரமாக அமைவது