பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

309

மொழியாகும் இது தமிழ் மன்றக் கூட்டமாக இருப்பதால் தமிழைப் பற்றியும் பேசலாம் என எண்ணுகிறேன்.

தமிழ் சோறு போடுமா?

இங்கே பேசியவர்கள் தமிழைப் பற்றி பல கருத்துகளைக் கூறினர். ஒருவர் சற்று காட்டமாகவே, ‘தமிழ் படித்து என்ன ஆகப்போகிறது. ராஸ்ல்கைமாவில் வந்து பணியாற்றும் நாங்கள், இங்கே தமிழ் பேசி என்ன சாதிக்கப் போகிறோம். ஆங்கில அறிவால் பல நன்மைகளைப் பெறுகிறோம்' தமிழால் பயனேதும் இல்லை, ஆங்கிலத்தால் அநேகப் பயன்கள் உண்டு என்ற தோரணையில் பேசினார்.

மாயத் தோற்றத்தில் மயங்கும் தமிழர்

இப்படியோரு மாயத் தோற்றம் இந்த நண்பரிடம் மட்டுமல்ல பலபேரை ஆட்கொண்டுள்ளது. அப்படிப் பேசுவது முற்போக்குச் சிந்தனையின் அடையாளமாகக் கருதி, பலபேர் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள் எனில் அஃது மிகையன்று.

நாள் இங்குள்ளவர்களை ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். தமிழ் நாட்டில் வாழம் மக்கள் தொகையில் எத்தனை சதவீதம் பேர் வேலை தேடி உங்களைப் போல் வெளிநாடு சென்றிருக்கிறார்கள்? ஒன்று அல்லது இரண்டு சதவீதம் இருக்குமா? இந்த இரண்டு சதவீதத்தினருக்காக தமிழ் நாட்டிலேயே வாழப் போகும் 98 சதவீதத்தினரை உங்கள் தாய் மொழி தமிழில் கல்வி கற்காமல் ஆங்கிலத்தில் தான் கல்வி கற்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்துவது என்ன நியாயம்? ஆங்கிலம் கற்க வேண்டாம் எனக் கூறவில்லை. உலகெங்கும் தொடர்பு மொழியாகப் பயன்பட்டு வரும் ஆங்கிலத்தை ஒரு மொழியாகப் படிக்கலாமே தவிர, ஆங்கிலத்துக்கு நம்மையே அடமானம் வைக்க முயல்வது அறிவீனம் மட்டுமல்ல, அறியாமையும் ஆகும்.