பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

317

யாகக் கொண்ட முஹம்மது நபி (சல்) அவர்கட்கு அவரது தாய்மொழியான அரபி மொழியில் புர்க்கான் வேதமும் இறைவனால் வழங்கப்பட்டது. இதிலிருந்து இறைவன் தாய்மொழிக்குத் தந்துள்ள தகுதிப்பாட்டை எண்ணி இன்புறலாம்.

நாயகத் திருமேனி அவர்கள் அரபகத்தையும் அடுத்துள்ள நிலப்பகுதியையும் ஆட்சி செய்ய நேர்ந்த பொழுது, அப் பகுதிக்கு ஆளுநர்களை அனுப்பும்போது, தங்கள் நிர்வாகத்துக்குட்பட்ட பகுதிகளில் பேசப்படும் மொழிகளைக் கற்று, அம்மொழி மூலமோ ஆட்சி செய்யப் பணிந்தார்கள் என்றால் அண்ணலார் அவரவர் தாய் மொழிக்குத் தந்துள்ள மதிப்பையும் மரியாதையையும் எண்ணி மகிழ்கிறோம். ஏனெனில் ஒரு முஸ்லிம் தான் பிறந்த, வாழும் பகுதியில் தாய்மொழியாய் எந்த மொழி அமைகிறதோ அதன் வளர்ச்சிக்கும் வளத்துக்கும் தங்கள் பங்களிப்பைக் கட்டாயம் செலுத்த வேண்டுமென நேரிடையாகவும் மறைமுகமாகவும் வற்புறுத்துகிறது இஸ்லாம்.

இந்த உணர்வின் அடிப்படையில் தான் இன்று என் போன்றவர்கள் தாய்மொழியாகிய தமிழின் வளர்ச்சிக்கும் வளத்துக்கும் இயன்ற வகைகளிலெல்லாம் உழைத்து வருகின்றோம். அதைத் தமிழ்ப் பணி என்று சொல்வதை விட ஒருவித இஸ்லாமியப் பணி என்று கூறுவதே சாலப் பொருத்தமாகும்.

(24.7.98 அன்று ராஸல்கைமா தமிழ் மன்ற விழாச் சொற்பொழிவுச் சுருக்கம்)