பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

320


பிற சமய அலசல்

நான் முஸ்லிம்கள் மத்தியில் உரையாடுவதைவிட முஸ்லிமல்லாதவர்களிடையேதான் பேசுவதையே பெரிதும் விரும்புகிறேன். இன்னும் சொல்லப்போனால் பிற சமயத்தவர் மத்தியிலே பேசும்போது, அவர்கள் போக்கிலேயே போய் அவர்களின் சமயச் சித்தாந்தங்களின் அடிப்படைகள் என்ன? அவற்றின் இன்றைய மாறுபட்ட வடிவங்கள் யாது? இம்மாற்றம் ஏற்பட காலம் தூவிய தூசிகள் எத்தகையது? உண்மைகள் எவ்வாறு மூடி மறைக்கப்பட்டுள்ளன? இவற்றையெல்லாம் அகற்றி அசலான தத்துவ நுட்பங்கள் என்ன? அவற்றிற்கும் மனிதர்களின் விருப்பு வெறுப்பகளுக்கேற்ப அறவே மாற்றப்படாத இறைமறைகூறும் அடிப்படைகளும் ஒன்றுபோல் பொருந்தி வருவதைப் போதிய காரண காரியங்களோடு விளக்கும்போது உண்மை வெளிச்சமாகிறது. இரண்டும் ஒரே நேர்கோட்டில் உலா வருவதைக் கண்டு வியப்படைகிறார்கள். கண்மூடித்தனமான பக்தியின் பேரால் எங்கோ வழி தவறிவிட்டோம். எடுப்பார் கைப் பிள்ளையாக எங்கோ கொண்டு சென்று விட்டார்கள் என்பதை உணருகிறார். வழி தவறிவிட்ட கன்றுக் குட்டி தாய்மாட்டைக் காணும்போது வாஞ்சையோடு ஓடி வருவது போல பலரும் குறிப்பாக அறிவுலகத்தைச் சார்ந்த சிந்தனையாளர்கள் இன்றும் இஸ்லாம் எனும் மூலத் தாயை நோக்கி வந்து கொண்டுள்ளார்கள்.

இறைவன் எல்லா நாடுகளிலும் எல்லா இனங்களிலும் எல்லா மொழியிலும் இறைவன் தன் செய்தியை வேத வடிவில் தந்துள்ளான். அச் செய்திகளை காலப்போக்கில் தம் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப மாற்றி விட்டார்கள். அண்ணலார் பெற்ற இறுதி வேதத்திலே அந்த மூலக் கருத்துகளும் மூல உணர்வுகளும் அப்படியே உள்ளன என்ற உணர்வை அவர்களுக்கு நாம் ஏற்றி வைக்கின்றபோது, அவர்கள் இதுதான் நாம் பின்பற்ற வேண்டிய சரியான