பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/323

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

321

பாதை, இதுவரை நாம் எங்கோ அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறோம் என்ற உணர்வோடு திரும்புகிறார்கள். இந்த மன மாற்றத்திற்கான ஒரு சிறு அசைவை உருவாக்குகிற செயலை நாம் செய்தாக வேண்டும் என்பது தான் என் வேணவா.

புதிய சித்தாந்தக் குழப்பம்

ஆனால், இன்றைய இந்தியத் திருநாட்டிலே ஒரு புதிய பண்பாட்டுத் தத்துவக் குழப்பம் அரசியல் பின்னணியோடு உலவ விடப்பட்டுள்ளது. அதுதான் 'இந்துத்துவா' எனும் புதிய அரசியல் முழக்கம். இப்புதிய கோட்பாட்டை இந்திய மக்கள் அனைவர் மீதும் திணிக்கும் போக்கும் தலைதூக்கியுள்ளது. இன்றையக் குழப்பங்களுள் தலையாயதும் இதுதான். இது இந்தியச் சமய நல்லிணக்க உணர்வுக்கு இடையூறாக ஏன், முட்டுக்கட்டையாகவே அமைந்து விடுமோ என நல்லுள்ளங்கள் கவலைப்படவே செய் கின்றன.

இந்துத்துவமா? இந்தியத்துவமா?

இந்துத்துவா என்பது வேறு; இந்தியத்துவம் என்பது வேறு. இந்துத்துவம் என்பது இந்து சமயச் சார்புடையதாகும். இந்தியத்துவம் என்பது இந்திய நாட்டு தேசியச் சார்புடையதாகும். சொல் ஒற்றுமையை வைத்து இரண்டும் ஒன்று என்று கருதிவிடக் கூடாது. இரண்டும் வெவ்வேறு தன்மைகளையுடையதாகும்.

விநோத விளக்கங்கள்

இந்துத்துவம் என்பதற்குச் சொல்லப்படும் விளக்கங்கள் விநோதமானவைகளாகும். இந்துத்துவம் என்றால் இந்தியாவில் வாழும் இந்திய மக்கள் தொடர்பான கொள்கையாகும். இந்தியாவில் பிறந்து வாழ்பவர்கள் அத்தனை பேரும் இந்தியர்களாவர். அவர்கள் இந்தியாவின் பண்பாட்டைத்