பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

322

தான் பின்பற்றி வாழ வேண்டும். இந்தியாவின் கொள்கை கோட்பாடுகளைத்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்தியாவின் கலை, பண்பாடு அனைத்தும் இந்து சமயச்சார்புடையனவாகும். எனவே, இந்து சமயச் சார்பான இறைக் கொள்கைகளையும் இந்து சமயக்கலை, பண்பாட்டுக் கூறுகளையும் இந்துத்துவக் கொள்கை, கோட்பாடுகளாகக் கொள்ள வேண்டும்' என கொஞ்சம் கொஞ்சமாக சுற்றி வளைத்து, இந்தியாவில் இருப்பவர்கள் அத்தனை பேரும், அவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் எந்த இனத்தைச் சார்ந்தவர்களாக, எந்த மொழியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் இந்தியர்கள், இந்துக்களாவர் என்ற மனநிலையை உருவாக்க முயல்கின்றனர். இந்தியாவில் வாழும் யாராக இருந்தாலும் அவர்கள் அனைவரும் இந்தியார்களே என்பதில் எள்முனை அளவும் வேறுபாடோ மாற்றுக் கருத்தோ இல்லை. ஆனால், இந்தியர்கள் அனைவரும் இந்துத்துவாக் கொள்கைகளை, கோட்பாடுகளை பின்பற்ற வேண்டு என்பதை இந்துக்களைத் தவிர வேறு யாரும் ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை.


இந்தியத் தனித்துவம்

இந்தியாவுக்கென்று தனித்துவமான சில கொள்கை, கோட்பாடுகள் உண்டு. இந்தியா என்றுமே 'யார்? ' என்று பார்ப்பதில்லை, 'என்ன?' என்பதில் மட்டுமே அக்கறை காட்டும். அதனால் கிருஸ்தவம், பார்சி, இஸ்லாம் போன்ற பல்வேறு சமயங்கள் இங்கே வந்து நிலைபெற்று பரவிட முடிந்தது. எனவே, இந்தியச் சமயங்களோ, இந்தியாவுக்கு வந்த சமயங்களோ இந்துத்துவா கொள்கையை எந்தக் காலத்திலும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. ஏனெனில் இந்துத்துவா என்பது இந்து சமயப் பண்பாடு, இந்தியத்துவம் இந்திய நாட்டின் சமுதாய, தேசியப் பண்பாடு ஆகும். சமயப்பண்பும் சமுதாயப் பண்பும் ஒன்றல்ல.