பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

35

கண்டுபிடித்திருந்தார். அதனைக் கொண்டு ஆய்வு செய்து, கிருஸ்தவ சமயம் கூறுவது போல் உலகம் தட்டையானது அல்ல, அது உருண்டையானது. ஆப்பிள் வடிவில் அமைந்துள்ளது என்பதை கண்டுபிடித்திருந்த போதிலும், கிருஸ்தவத்துக்கு நேர் எதிரான இந்தக் கண்டுபிடிப்பை - உண்மையைக் கூற தைரியமில்லாமல், அந்தப் புதிய கண்டுபிடிப்பை - கருத்தை - விஞ்ஞானிகள் மத்தியிலே மட்டும் பரவ விட்டிருந்தார்.

அவருக்குப் பின் கலீலியோ என்னும் இத்தாலிய வானவியல் விஞ்ஞானியும் ஆற்றல்மிக்க தொலை நோக்கியைக் கண்டுபிடித்து ஆய்வில் ஈடுபட்டார். ஆய்வின் முடிவில் உலகம் உருண்டை எனும் உண்மையைக் கண்டு பிடித்ததோடு கோப்பர்நிக்கஸ் கண்டறிந்து கூறிய 'உலகம் உருண்டையானது' என்ற கண்டுபிடிப்பு நூற்றுக்கு நூறு உண்மையானது என்பதை உலகுக்குப் பறை சாற்றினார். நான் கண்டுபிடித்ததும் கோப்பர்நிக்கஸ் கண்டுபிடித்ததும் ஒன்றேயாகும். உலகம் உருண்டையானதுதான் என்பதை கலீலியோ கூறினதைக் கேட்டதும் கிருஸ்தவ உலகம் மருண்டது. விவிலியத்துக்கு எதிராகக் கூறுவதா? உலகம் தட்டையானது என்றல்லவா விவிலியம் கூறுகிறது. அதற்கு முற்றிலும் மாறுபட்ட முறையில் உலகம் உருண்டை எனக் கூறுவதா என வெகுண்டெழுந்து, கலீலியோவை சிறையில் அடைத்தது. விவிலியத்திற்கு நேர்மாறான இந்தக் கருத்தைக் 'கண்டுபிடிப்பு' என்ற பெயரில் கூறியதற்காக உன்னைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்றெல்லாம் அவரை மிரட்டியதோடு நீண்ட காலம் அவருக்குச் சிறைவாசம் தந்து வருத்தினார்கள். மூப்பின் எல்லைக் கோட்டில் நின்றிருந்த கலீலியோ தன் இறுதி நாட்களை ஓரளவு நிம்மதியோடு கழிக்க விரும்பினார். தான் கண்டறிந்த 'உலகம் உருண்டை' என்ற உண்மையை - தன் மனசாட்சிக்கு விரோதமாக - உண்மைக்குப் புறம்பாக அவரே மறுத்துக் கூற வேண்டிய கட்டாயச் சூழ்நிலை. வழக்கு மன்றத்தில் "உலகம்