பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

நஃபில் தொழுகையெல்லாம் ஏன் தொழ வேண்டும்? என்று கேள்விக் கணைகளைத் தொடுக்கத் தயங்குவதில்லை. இன்னும் ஒரு சிலர் ஒரு முஸ்லிமுக்கு மகனாகப் பிறந்த ஒரே காரணத்துக்காக முஸ்லிம் என்ற பெயரை மட்டும் தாங்கிக் கொண்டு, இஸ்லாத்தைப் பற்றி எதுவுமே தெரியாதவர்களாக உலாவும் பெயர் தாங்கி முஸ்லிம் இளைஞர்களில் சிலர் ஏன் ஐவேளைத் தொழுகை? வெள்ளிக் கிழமைத் தொழுகை மட்டும் போதாதோ? என்றெல்லாம் எண்ணத்தான் செய்கின்றார்கள். இது அவர்கள் தவறல்ல; இளமை முதலே முறைப்படி இஸ்லாத்தைக் கற்பிக்கத் தவறிய நம் குறைதான் இதற்குக் காரணம். நாம் தான் குற்றவாளி.

இறையச்ச உணர்வூட்டும் ஐவேளைத் தொழுகை

வினா தொடுத்த டிசில்வாவை நோக்கி நான் விளக்கமளிக்க முயன்றேன். "நீங்கள் எண்ணுவது போல் இறைவணக்கத் தொழுகை என்பது ஏதோ போகிற போக்கில் செய்துவிட்டுப் போகிற ஒரு சமயச் சடங்கு அல்ல. தொழுகையின் அடிப்படைத் தத்துவமே உளவியல் அடிப்படையில் அமைந்துள்ளது. வைகறையில் கண்விழத்தெழும் ஒரு முஸ்லிம் தொழுகையாளி உடல் சுத்தம், உள்ளச் சுத்தம் என்ற முறையில் ஒலுச்செய்து கொண்டு, தூய்மையான முசல்லா விரிப்பின் மீது மக்காவிலுள்ள காபாவை முன்னோக்கி அமர்கிறார். இப்போது அவர் அனைத்துச் சிந்தனையும் உணர்வும் இறையில்லத் திசையின்பால் திருப்பப்படுகிறது. காபா இறையில்லமே தவிற இறைவனல்ல என்பதை உணர்ந்தே அதை நோக்கி அமர்கிறார். அவருள் அழுத்தமாக எழும் மற்றொரு உணர்வு இறைவன் தம்முன் இருப்பது போலவும் அவன் முன்பாக மண்டியிட்டுத் தொழுது, அவனது பேரருளை வேண்டித் தொழுவது போன்ற மன உணர்வை அழுத்தமாக உருவாக்கிக் கொண்டு தொழத் தொடங்குகிறார். அப்போது தொழுகைப் பாடத்துக்கும் அப்பால் அவர் மனவுணர்வு