பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

சம்பிரதாயங்கள் அல்ல" என விளக்கிக் கூறியதைக் கேட்ட நண்பர் டிசில்வா விரைந்து எழுந்து வந்து, இரு கைகளைப் பற்றி குலுக்கியவராக, ஒரு மனிதன் தனக்குத்தானே அச்சவுணர்வோடு, செம்மையாக, வாழ்க்கைச் செயல்பாடுகளை அமைத்துக் கொள்ள இதைவிடச் சிறந்த வழி வேறு எதுவுமே இருக்க முடியாது. உங்கள் ஐவேளைத் தொழுகை முறைக்கு இப்படியொரு உட்பொருள் உளவியல் அடிப்படையில் உட்பொதிந்திருப்பதை அறிந்து பெரிதும் மகிழ்கிறேன் எனக் கூறி, கைகுலுக்கிப் பாராட்டி மகிழ்ந்தார்.

ஒவ்வொரு முஸ்லிமும் இறையச்சத்தோடு வாழ வேண்டும் என்பதுதான் இறை நியதி. இறையச்ச உணர்வு நெஞ்சம் நிறைந்திருக்கும் வரை ஒரு முஸ்லிம் இறை நெறி பிசகி வாழ இயலாது.

இவ்வாறு இருபத்தி நான்கு மணி நேரமும் இரவு பகல் இடையறாது இறையச்சத்துடன் வாழவே ஐவேளைத் தொழுகையுடன் நள்ளிரவுத் தொழுகையான 'தஹஜ்ஜத்' தொழுகையையும் பேணி நாம் தொழுது வருகின்றோம்.

ஒரு மனிதனுடைய உள்ளத்தில் இறையச்ச உணர்வு இருக்கும் வரை அவன் மனம் தவறான எண்ணங்களுக்கு அறவே இடம் தராது. இந்த அச்ச உணர்வே அவனைத் தடுத்து நிறுத்தி நல்ல எண்ணங்களிலும் நற்செயல்களிலும் நம்மைக் கொண்டு செல்லும். 'இது தப்பான காரியம், இதைச் செய்தால் இறைவன்கிட்ட மாட்டிக் கொள்ளும்படியாகிவிடும். இறைவனுடைய கோபம் பொல்லாதது. கடுமையான தண்டனைக்கு நம்மை ஆளாக்கி விடும், என்றெல்லாம் அவன் மனதிலுள்ள இறையச்ச உணர்வு மனச்சாட்சி வடிவில் அவனை மிரட்டிக் கொண்டிருப்பதனால் அவன் எந்தத் தீங்கும் செய்யாதவனாக - எவ்விதத் தீய உணர்வுக்கும் இடம் தராதவனாக வாழ வேண்டிய கட்டாயச் சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால்