பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

47


அண்ணலார் வாக்கில் காணும் அறிவியல் அடிப்படை

"நாற்பது நாட்கள் வெறுங்காலுடன் செருப்பணியாமல் பொதுச் சாலைகளில் ஒருவர் நடந்திருந்தால் அவரது சாட்சியத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டாம்", என்று பெருமானார் (சல்) அவர்கள் கூறியதாக அல் ஹதீஸில் ஒரு குறிப்பு வருகிறது.

சாதாரண நிலையில் இவ்வாறு கூறியிருக்கும் கருத்தை எண்ணிப் பார்த்தால் செருப்பணிந்து வெளியில் செல்ல வேண்டும் என்ற பொறுப்புணர்வும் சுத்தம் சுகாதாரத்தைப் பேண வேண்டும் என்ற எண்ணமும் இல்லாதவன் கூறும் சாட்சியமும் பொறுப்புணர்வுமிக்கதாக இருக்க இயலாது; ஆகவேதான் இவ்வாறு அண்ணலார் கூறியுள்ளார் என்றே எண்ணத்தோன்றும். ஆனால் அவ்வாறு கூறியதற்கு இது வல்ல காரணம்.

நாம் ஏன் காலில் செருப்பு மாட்டிக் கொண்டு வெளியில் நடக்கிறோம். வீட்டிலும்கூட மல ஜலம் கழிக்கும் கக்கூஸ் போன்ற இடங்களுக்குச் செருப்பு இல்லாமல் நாம் செல்லுவதே இல்லை. காரணம், அங்கேயெல்லாம் கண்ணுக்குத் தெரியாத நச்சுக்கிருமிகள் படிந்திருக்கும். அவற்றின் மீது கால் பதித்தால் அவை நம் கால்வழி உடலுக்குள் ஊடுருவிச் சென்றுவிடும்; அவை உடலுள் பல நோய்களைத் தோற்றுவித்து விடும் என்பதனாலேயே செருப் பணிந்து நடமாடுகிறோம்.

பலரும் நடமாடும் பொதுவிடங்களிலும் பொதுச் சாலையிலும் எத்தனையோ பேர் காரி உமிழ்ந்திருக்கலாம். இவ்வாறு காரி உமிழ்ந்தவர்களில் பலவிதமான கொடிய நோயுள்ளவர்களும் இருக்கலாம். சிலர் மலமோ சிறுநீரோ கூட கழித்திருக்கலாம். அவை காய்ந்து போயிருப்பினும் கூட, அவற்றிலுள்ள நுண்கிருமிகள் உயிரோடு மண்ணோடு கலந்திருக்கலாம். அவை செருப்பணியாமல் ஒருவர் வெறுங்காலுடன் நாற்பது நாட்கள் நடந்திருந்தால் நிச்சயம்

4