பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

அந்நுண்கிருமிகள் கால் வழி உடலுள் புகுந்து, அவனறியாமல் பல நோய்களை உருவாக்கியிருக்கலாம். அதனால் அவர் மனநிலை பாதிப்புக்குள்ளாகியிருக்கக் கூடும்.

சாதாரணமாகக் காற்றின் மூலம் சளிக்கிருமிகள் பரவுகின்றன. அதனால் தும்மல் வரும்போது சிறு துண்டை அல்லது கைக்குட்டையால் அல்லது குறைந்தபட்சம் கையால் வாயைப் பொத்தி, அக்கிருமிகள் தும்மல் மூலம் வெளியேறி மற்றவர்களைப் பீடிக்காமல் தடுக்க முயல்கிறோம். அதையும் மீறி சளிக் கிருமிகள் நம்மைத் தாக்கி, சளியுண்டாக்கும் போது மிகவும் சங்கடப்படுகிறோம். அப்போது பேச நேரிட்டால் எரிஞ்சு விழுகிறோம். அந்த அளவுக்கு சளிக்கிருமிகளால் ஏற்பட்ட உபாதை நம் மன நிலையையே பாதித்து விடுகிறது.

ஆனால்; நாற்பது நாட்கள் நச்சுக் கிருமிகளுக்கிடையே நடமாடியவனின் உடலுள் புகுந்த நச்சுக் கிருமிகள் எத்தனையோ உபாதைகளை அவன் உடலுள் உருவாக்கி மன நிலையைப் பாதித்திருக்கலாம். அதுவும் அவனறியாமலே ஏற்பட்டிருக்கலாம். இந்நிலையில் ஒருவன் சாட்சி சொல்ல முயன்றால் பாதிப்புக்குள்ளான மன நிலை, அவன் அளிக்கும் சாட்சியத்தையும் பாதிக்காமல் இருக்காது. அச்சாட்சியம் நேர்மையாகவும் நீதியாகவும் இருக்காது. அதனாலேயே அத்தகைய சாட்சியத்துக்கு முக்கியத்துவம் தரவேண்டாம் என நபிகள் நாயகம் (சல்) கூறினார்கள். இவ்வாறு வள்ளல் நபி பெருமானார் கூறிய கருத்துக்கள் ஒவ்வொன்றின் மீதும் அறிவியல் வெளிச்சத்தைப் பாய்ச்சி ஆராய்ந்து பார்ப்போமேயானால் அவையனைத்துமே அறிவியல் அடிப்படையில் அமைந்திருப்பதை உணர்ந்து தெளியலாம்.

அறிவியலுக்கு விளக்கம் தரும் அல்- குர்ஆன்

இன்னும் சொல்லப்போனால், விஞ்ஞான உலகோடு கடந்த நாற்பதாண்டுகளுக்கு மேலாக நெருக்கம் கொண்