பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

இன்று சூரிய மண்டலத்திற்கு அப்பாலும் தன் ஆய்வுப் பார்வையைச் செலுத்த முனைந்து விட்டான்.

ஏழு வானமும் பயோனீர் ஆய்வும்

பல ஆண்டுகளுக்கு முன்னர் சூரிய மண்டலத்தை ஆய்வதற்காக அமெரிக்காவிலிருந்து ஏவப்பட்ட 'பயோனீர்' ஆய்வு விண்கலம் இன்று சூரிய மண்டலத்திற்கு அப்பால் சென்று தன் ஆய்வைத் தொடர்ந்து கொண்டுள்ளது. சூரிய மண்டலத்தைப் போல் பல வான மண்டலங்கள் இருப்பதாகக் கருதும் விஞ்ஞானிகளின் அனுமான அறிவு இன்று பயானீர் விண்கல ஆய்வு மூலம் உண்மையாகி வருகிறது. 'ஏழு வான மண்டலங்கள்' உண்டு என்று கூறும் குர்ஆனிய கருத்து, வான மண்டல. ஆய்வே கால்கோள் செய்யப்படாத காலத்தில், திருமறை மூலம் இறைவனால் உணர்த்தப்பட்டிருப்பதை விஞ்ஞான உலகம் கண்டு வியந்து போய் நிற்கிறது.

இதற்கெல்லாம் அடிப்படையாய் அமைந்திருப்பது எது?

இறைவனின் படைப்பு ரகசியங்களை, இறைவனின் கட்டளைப்படி, மனிதன் அறிந்து கொள்ள முற்பட்டதன் விளைவுதான், இத்தகைய ஆய்வு வேட்கையும், புதிய புதிய கண்டுபிடிப்புகள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வரும் இடையறா முயற்சிகளும் ஆகும்.

ஆராயத் தூண்டும் அரும் மறை

திருமறை முழுவதும் மனிதனைச் சிந்திக்கத் தூண்டும் இறை வசனங்களால் நிறைந்துள்ளது. சில ஆயத்துகளின் இறுதி வாசகத்தின் பொருள் நுட்பம் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. சில வசனங்களின் இறுதியில் "இவ்வாசகத்தின் உட்பொருளை அறிய முற்படுவோர்க்குப் பல உண்மைகள் புலப்படும்" என்றும் இன்னும் பல வசனங் களின் இறுதிப் பகுதியில் "இவ்வசனங்களை உய்த்