பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/55

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

53

துணர்ந்து ஆய்வோர்க்குப் பல அரிய செய்திகள் தெரிய வரும்' என்றும் இன்னும் சில வசனங்களின் இறுதியில் "இதை ஆராய்ந்து பார்ப்போர்க்கு பல அற்புத புதியன கண்டறியும் பொருள்நுட்பம் புலப்படும்" என்றெல்லாம் கூறியிருப்பதைக் காணலாம். இறை வசனங்களின் அடிப்படையில் மனிதன் சிந்திக்கவும், சிந்தித்தவைகளின் அடிப்படையில் புதிய புதிய ஆய்வுகளை மேற்கொண்டு புதியன புனையும் புதுப்புது ஆய்வுகளையும் கண்டுபிடிப்புகளைக் கண்டறியவும் தூண்டுவதாயுள்ளன.

இதையே பெருமானார் (சல்) அவர்கள் இறைவன் மனிதனுக்காக மண்ணிலும் விண்ணிலும் கடலடியிலும் பொதிந்து வைத்திருக்கும் இரகசியங்களைத் தன் ஆய்வறிவால் ஆராய்ந்து பெற "இறைவன் மனிதனுக்களித்த மறை பொருள் ரகசியத்தை அறிய ஒரு விநாடி சிந்திப்பது 70 ஆண்டுத் தொழுகைக்குச் சமம்" என நபிகள் நாயகம் (சல்) அவர்கள் கூறி, சிந்திப்பதன் சிறப்பை - ஆராய்ச்சியின் அவசியத்தை அவனிக்கு உணர்த்தினார். அண்ணலெம் பெருமானார் (சல்) அவர்கள் இறைவன் மனிதனுக்காகத் தந்தவற்றையெல்லாம் ஆராய்ந்து கண்டறிய வேண்டும். தன் ஆராய்ச்சி மூலம் அவற்றையெல்லாம் அனுபவித்து மகிழ வேண்டும் என்பது இறைக் கட்டளையாகும்.

அறிவியல் என்றால் என்ன?

"மனிதன் தன்னையும் தன்னைச் சுற்றியுள்ள சுற்றுப் புறத்தையும், தான் காணும் இயற்கைச் சூழலையும் அவற்றில் மறைபொருளாய் அமைந்துள்ள ரகசியங்களையும் தன் சொந்த முயற்சியால், அறிவின் துணைகொண்டு சோதனைகளின் உதவியோடு தெளிவாய்ப் புரிந்து கொள்ளும் முயற்சியே அறிவியலாகும்".

ஆய்வே அறிவியலுக்கு அடிப்படை

இம் முறையில் மனிதன் மேற்கொண்ட ஆராய்ச்சி