பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

முயற்சிகள் தான் இன்று அறிவியல் ஆய்வுகளாக - விஞ்ஞானக் கண்டு பிடிப்புகளாக வளர்ந்து வளம் பெற்று வருகின்றன. இவ்வகையில் அமையும் அறிவியல் ஆய்வுக்கு முடிவே இல்லை. 'கியாமத்து நாள்' என்று கூறப்படும் உலக இறுதி நாள்வரை நீளுகின்ற ஒரு முயற்சி. மனிதன் இறை ரகசியங்களை அறிய எவ்வளவுக்கவ்வளவு முயல்கின்றானோ அவ்வளவுக்கவ்வளவு அவன் பயன்களைப் பெற்று அனுபவித்து மகிழலாம். இம்முயற்சியில் முஸ்லிம்கள் தொய்வின்றித் தொடர்ந்து முயன்று கொண்டே இருக்க வேண்டும் என்பது திருமறை தரும் அறிவுரையாகும். இதுவே பெருமானார் பெரிதும் வற்புறுத்தி வந்த வாக்கமுதுமாகும்.

சீனாவுக்குச் செல்லப் பணித்தது ஏன்?

நான் நினைத்துப் பார்க்கிறேன். இஸ்லாமியக் கூட்டங்களில் பேசும் பலரும் பெருமானார் கூறிய புகழ் பெற்ற ஒரு வாசகத்தைக் கூறுவார்கள். அது தான் 'சீனாவுக்குச் சென்றேனும் சீர் கல்வி பெறுக' என்ற வாசகம். கல்வியின் முக்கியத்துவத்தை மட்டும் எடுத்துக்கூறும் வாசகமாக பலரும் கருதும் வகையில் நான் இவ்வாசகத்தைக் கருதவில்லை. நான் எப்போதுமே நாயகத் திருமேனி கூறிய வாக்குகளை அப்படியே பார்ப்பதில்லை. ஏன் இப்படிக் கூறியுள்ளார்? இதற்கு வேறு ஏதேனும் பொருள் இருக்க முடியுமா? எனப் பல கேள்விக் கணைகளை எழுப்பி, அவற்றிற்கு விடை காணும் முயற்சியில் முனைப்புடன் ஈடுபடுவேன். அப்போதுதான் அவர் கூறிய வார்த்தைகளின் பொருள் நுட்பம் திட்டமாக நமக்குப் புலனாகும். பெருமானார் (சல்) அவர்களின் சொல்லமுதுகளையும் நாம் முழுமையாகப் புரிந்தின்புற முடியும். ஏனெனில் பெருமானார் வாழ்வும் வாக்கும் ஆய்வுக்குரிய திறந்த புத்தகமாகும்.

இந்தக் கோணத்தில் "சீனாவுக்குச் சென்றேனும் சீர் கல்வி பெறுக" என்ற வாசகத்தை எடுத்துக் கொண்டு ஏன்?