பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58


மலைப்பூட்டும் ஆய்வுப் பெருக்கை
மூடிமறைத்த சிலுவைப் போர்

இப்படி அன்றைய அரேபிய ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட விஞ்ஞான ஆய்வு முயற்சிகளும் அதன் விளைவாகக் கண்டறியப்பட்ட கண்டுபிடிப்புகளும் ஒன்றிரண்டல்ல. அண்ணலார் காலந்தொட்டு அக்கண்டுபிடிப்புகளின் - அவை சார்ந்த துறைகளின் எண்ணிக்கையைப் பட்டியலிட்டபோது மலைத்தேன் என்று கூறுவதைவிட திகைத்து, வியப்பில் மூழ்கினேன் என்றுதான் கூற வேண்டும். சிலுவைப் போரின் விளைவாக இவ்விஞ்ஞான கண்டுபிடிப்புகளின் விபரங்கள் உலகுக்குத் தெரியாமல் மூடி மறைக்கப்பட்டுவிட்டன. இங்கிலாந்தில் ஏற்பட்ட தொழிற்புரட்சியின் விளைவாக ஏற்பட்ட அறிவியல் வளர்ச்சியும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் மட்டுமே உலகுமுன் பறைசாற்றப்பட்டன. அந்தத் தொழிற்புரட்சிக்கு ஆதாரமான அடிப்படைக் கண்டுபிடிப்புகள் அனைத்தும் அரபு விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டவை என்ற உண்மைகள் நீண்ட நெடுங்காலமாக மறைக்கப்பட்டு வருவதை இன்றைய அறிவுலகம் - ஆராய்ச்சியுலகம் கடுமையாகக் கண்டிக்கத் தொடங்கியுள்ளன. அண்மை நிகழ்வுகள் பல இதை வெளிப்படுத்தி வருவதைக் காண முடிகிறது.

'உண்மை நெடுங்காலம் உறங்க முடியாது'

அண்மையில் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் புருணைச் சுல்தானின் பெரும் நிதியுதவியைக் கொண்டு தொடங்கப்பட்ட "இஸ்லாமிய ஆய்வு அறக்கட்டளை" யைத் தொடங்கி வைத்த இங்கிலாந்து நாட்டு இளவரசர் சார்லஸ் பேசும்போது, "இன்றைய அறிவியல் வளர்ச்சிக்கு அடிப்படை அமைத்துத் தந்தவர்கள் முஸ்லிம்களே என்ற அடிப்படை உண்மையை இனியும் ஐரோப்பியர் மூடி மறைக்க முடியாது. நேர்மையுள்ளம் படைத்த ஆராய்ச்சியாளர்களும், அறிவியல் வரலாற்று ஆசிரியர்களும்