பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

அனைத்தும் ஒருங்கே அமையப் பெற்ற மாபெரும் வளாகமாக - பல்கலைக் கழகமாக இன்றும் புகழுடன் விளங்குகிறது.

இப்படியே அறிவியல் வளர்ச்சிக்கு ஆதாரமான இஸ்லாமியத் தகவல்களையும் முஸ்லிம்களின் பங்களிப்பையும் விளக்கிக் கொண்டே செல்ல முடியும். என்றாலும் நேரத்தின் அருமை கருதி, அண்ணல் நபிகள் நாயகம் (சல்) அவர்களின் வாக்கையும் திருமறையாம் திருக்குர்ஆனில் பொதிந்துள்ள அறிவியல் செய்திகளின் சிறப்பையும் ஓரளவு கோடிட்டுக் காட்டினால் போதும் எனக் கருதுகிறேன்.

விண்ணாய்வுக்கு 'விதி' கண்டவர்

இன்றைக்கு விண்ணிலே எண்ணற்ற விந்தைகள் நிகழ்ந்து கொண்டுள்ளன. நிலவிலே மனிதன் இறங்கி தன் காலடித் தடத்தை அழுத்தமாகப் பதித்து விட்டான். செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என்று நாட்களின் பெயர்களிட்ட கிரகங்களுக்கெல்லாம் செயற்கைக் கோள்களை அனுப்பி இடையறாது ஆராய்ந்து கொண்டுள்ளான். சிலவற்றில் ஆய்வுக் கலங்களை இறக்கி, அதிலுள்ள கருவிகளை இயங்கச் செய்து எத்தனை யெத்தனையோ ஆய்வுகளைச் செய்து, செய்தியைச் சேகரித்துக் கொண்டு வருகிறான். இத்தனை விண்வெளி ஆய்வுச் செயல்களுக்கும் வழிவகை செய்தது எது? இவ்வாராய்ச்சி முயற்சிகளுக்கு ஆதார சுருதியாக அமைந்தது எது? 'ஈர்ப்பு விசை' (Power of Gravity) என்ற ஆராய்ச்சி உண்மைதான் விண்ணியல் ஆய்வுக்கே மாபெரும் உந்து சக்தியாக அமைந்தது.

இதற்கும் அடிப்படையாயமைந்தது 'இயக்கவியல்' குறித்த ஆராய்ச்சிகளாகும். இத்துறையில் அடித்தளம் அமைத்த பெருமை முஸ்லிம் விஞ்ஞானிகளையே சாரும். இன்றைய வானவியல் ஆய்வின் முத்தாய்ப்பாக அமைந்துள்ள இயங்கு விசைக் கோட்பாட்டை வகுத்த பெருமை