பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

63

இப்னு அல்-ஹைத்தாம் அவர்களையே சாரும். ஈர்ப்பு விசை பற்றிய இவரது கோட்பாட்டை அடியொற்றி உருவானதே நியூட்டனின் புவியீர்ப்புக் கோட்பாடு.

'மரத்திலிருந்து ஆப்பிள் பழம் ஏன் கீழே விழ வேண்டும்?' என்ற கேள்வி எழுப்பி, பூமியின் ஈர்ப்பு விசையினால்தான் இது ஏற்படுகிறது என்பதைக் கண்டறிந்து கூறியவர் நியூட்டன். அவரது ஆராய்ச்சியை அடியொற்றி விண்ணிலுள்ள கிரகங்களுக்கிடையிலான இழுப்பு விசையின் அளவுகளை ஆராய்ந்து, கண்டறிந்து கணித்தவர் ஐன்ஸ்டீன் எனும் இயற்பியல் விஞ்ஞானி.

அன்றே குர்ஆனில் 'சார்புக் கொள்கை'

ஐன்ஸ்டீன் கண்டறிந்த இழுப்பு விசையை அதாவது 'Theory of Relativity' அதாவது 'சார்புக் கொள்கை' எனக் கூறினார். இதன் அடிப்படையிலேயே இன்று செயற்கை கோள்கள் பலவற்றை விண்ணுக்கனுப்பி, விண்கோளாய்வுகள் அதிக அளவில் நடைபெறுகின்றன. "அரபு நாட்டு வானவியல் அறிஞர்களின் தோள்களில் நின்றுதான் என்னால் வானத்தையே ஆய முடிகிறது" என்று நியூட்டன் கூறியது போலவே, ஐன்ஸ்டீனும் நியூட்டனின் தோள்களில் நின்று தான் என்னால் வானத்தை - கோள்களிடையிலான ஈர்ப்பு விசையை - அவை ஒன்றோடொன்று சார்ந்துள்ள இழுப்பு விசையை கண்டறியவும் கணிக்கவும் முடிந்தது என்று கூறியுள்ளது நினைக்கத் தக்கதாகும்.

வானவியலின் உயிர் நாடியான ஈர்ப்பு விசை - சார்புக் கொள்கையையே திருமறையாம் திருக்குர்ஆன் மிகத் தெளிவாகக் கூறி விளக்குகிறது.

"சூரியன் சந்திரனை அணுக முடியாது. இரவு பகலை முந்த முடியாது (இவ்வாறே கிரகங்களும் நட்சத்திரங்களும்) ஒவ்வொன்றும் (தன்னுடைய) வட்ட வரைக்குள் நீந்திச் செல்கின்றன." (36:40)

எனத் தெளிவாகக் குறிப்பிடுகிறது.

5