பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64


சூரியனை மையமாகக் கொண்ட சூரிய மண்டலக் கோள்கள் அனைத்தும் தங்களுக்கிடையேயும் தங்களுக்கும் சூரியனுக்கிடையேயும் உள்ள ஈர்ப்பாற்றல் விசையின் காரணமாக ஒன்றையொன்று நெருங்கவோ அல்லது ஒன்றை விட்டு ஒன்று தூரமாக விலகிச் செல்லவோ இயலாமல் ஒன்றையொன்று ஈர்த்தபடி, அவை தத்தமக்குரிய, வரையறுக்கப்பட்ட வட்ட வரைக்குள் நீந்திச் சுற்றிச் சுழன்று கொண்டுள்ளன. இதனால், சூரியன் சந்திரனை அணுக முடியாது. பூமி சூரியனையோ அல்லது சந்திரனையோ அல்லது வேறு கிரகங்கள் எதனையுமோ நெருங்கவோ அல்லது விலகிச் செல்லவோ இயலாது எனத் திருமறை தெளிவாகக் கூறி அறிவுறுத்துகிறது.

இவ்வாறு சூரியனும் மற்ற கோள்களும் ஒன்றையொன்று சார்ந்திருக்கக்கூடிய ஈர்ப்பு விசையாகிய இழுப்பாற்றலையே - அது தொடர்பான கொள்கையையே 'சார்புக் கொள்கை' (Theory of Relativity) எனக் கூறினார் வானியல் விஞ்ஞானி ஐன்ஸ்டீன். இவர் இன்று கூறிய - கண்டறிந்து விளக்கிய சார்புக் கொள்கை இறைவாக்காகப் பன்னூறு ஆண்டுகட்கு முன்னதாகவே திருமறையில் இடம் பெற்றுள்ளது என்ற செய்தி இன்றைய விஞ்ஞான உலகை வியப்பிலாழ்த்துவதாக உள்ளது.

இவ்வாறு சூரிய மண்டலக் கோள்கள் பூமி உட்பட அனைத்துக் கிரகங்களின் ஈர்ப்பாற்றலைத் துல்லியமாகக் கணக்கிட்டு 'சார்புக் கொள்கை' (Theory of Relativity)யை அடிப்படையாகக் கொண்டே இன்று செயற்கைக் கோள்கள் யாவும் விண்ணிலே வலம் வந்து, இன்று தங்களின் பன்முக ஆராய்ச்சியைத் திறம்படச் செய்து வருகின்றன.

சூரிய மண்டலத்திற்கு அப்பாலும்

அது மட்டுமா? நாம் இதுவரை அறிந்ததெல்லாம் சூரிய மண்டலம் ஒன்றைப் பற்றி மட்டுமே. சூரிய மண்டலத்தைத் தவிர்த்து வேறு எந்த மண்டலம் பற்றியும் மனித