பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72


தண்ணீரில் 'அமீபா' எனும் ஓரணு உயிரணுவிலிருந்தே எல்லா விதமான உயிரினங்களும் தோற்றம் பெற்றன. டார்வின் கண்டறிந்து கூறிய இதே உண்மையைத் தான் இறை வேதமாகிய திருக்குர்ஆனும் தெளிவாக எடுத்துக் கூறுகிறது.

"உயிருள்ள ஒவ்வொன்றையும் நீரிலிருந்து படைத்தோம்." (21:30)

"உயிர்ப் பிராணிகள் ஒவ்வொன்றையும் அல்லாஹ் நீரைக் கொண்டே படைத்திருக்கிறான்." (24:45)

எனவே, நாம் பெருமானாருடைய வாழ்வையும் வாக்கையும் அவற்றின் அடிப்படையில் இறை நெறியாகிய இஸ்லாத்தையும் திறம்பட அறிந்து உணர்ந்து தெளிய வேண்டும் என்றால் உளவியலின் துணை கொண்டு ஆன்மீக, அறிவியல் ஒளிகளைப் பாய்ச்சி ஆராய வேண்டும். அப்போதுதான் இறைவாக்கின் உட்கருத்துகள் தெளிவாகும். அப்போதுதான் எல்லா உண்மைகளும் வெளிச்சமாகும்.

'அக வாழ்வைப் பொறுத்தவரை ஆன்மீகத்தைப் பின்பற்றி உன் வாழ்வை வளமாக்கிக் கொள். புற வாழ்வைப் பொறுத்தவரை அறிவியலைப் பயன்படுத்தி, அறிவியல் மூலமாக உன் புற வாழ்வைச் செழிமைப்படுத்திக் கொள்' என்பது பெருமானாரின் பெருவாழ்வும் திருமறையாம் திருக்குர்ஆனும் நமக்குப் புகட்டுகின்ற வாழ்வியல் உண்மைகள்.

இரு கண்களாக ஆன்மீகமும் அறிவியலும்

இந்த வகையில் ஆன்மீகமும் அறிவியலும் வேறுபட்டவைகளோ ஒன்றுக்கொன்று முரண்பட்டவைகளோ அல்ல. இரண்டும் இரு கண்களைப் போன்றவை. ஆன்மீகம் ஒரு கண்; அறிவியல் இன்னொரு கண். இந்த இரண்டு கண்களும் இணைந்து பார்க்கும் போதுதான், நம்