பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

அல்லாஹ்வுக்கே உரித்தாகும். இப்பாராட்டுக்களுக்கெல்லாம் நான் தகுதியுள்ளவன்தானா என்பதில் எனக்கு ஐயமுண்டு. மேலும், இவர்கள் எந்தச் செயல்களை - பணிகளை ஆற்றியதற்காக என்னைப் பாராட்டினார்களோ அந்தச் செயல்களை, பணிகளை ஆற்றத் தொடங்கியபோது, அதற்காக இப்படியெல்லாம் பாராட்டுவார்கள் என்று நான் எதிர்பார்த்துச் செய்யவில்லை. ஒரு முஸ்லிம் தான் பிறந்த மண்ணுக்கு, மண் சார்ந்த மக்களுக்கு, இனத்துக்கு, மொழிக்கும் தான் பின்பற்றும் மார்க்கத்திற்கும் மார்க்கம் சார்ந்த மக்களுக்கும் என்ன செய்ய வேண்டுமோ அதை முறையாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையிலேதான் என் பணிகள் அமைந்துள்ளன.

மண்ணின் வேரும் வேரடித் தூருமாக

இங்கே பேசுகின்றபோது ஒரு கருத்தைச் சொன்னார்கள். 'தமிழைப் பற்றி இவ்வளவு பேச வேண்டுமா?' என்ற ஐயப்பாடுகூட சிலருக்கு ஏற்பட்டிருக்கலாம். தமிழை நம்மிடமிருந்து எப்படிப் பிரிக்க முடியும்? 'இஸ்லாம் எங்கள் வழி; இன்பத் தமிழ் எங்கள் மொழி' என்பதுதான் ஒவ்வொரு தமிழ் முஸ்லிமின் இதயநாதம்; இன்பக் கீதம். இந்த உணர்வின் அடித்தளத்தில் வந்தவர்கள் நாம். ஏதோ நாம் இந்த அரபக மண்ணிலே பிறந்து தமிழக மண்ணிலே வாழ்ந்து வருபவர்கள் அல்ல. தமிழ் மண்ணின் வேரும் வேரடித் தூருமாக இருப்பவர்கள். எனவேதான் தமிழுக்கும் தமிழ் இன மக்களுக்கும் இஸ்லாமிய மார்க்கத்திற்கும் மார்க்கம் சார்ந்த மக்களுக்கும் எல்லா வகையிலும் தொண்டு செய்வது இன்றியமையாக் கடமையாகக் கருதி அப்பணியைச் செவ்வனே செய்து வருகிறோம்.

இஸ்லாம் எங்கள் வழி; இன்பத் தமிழ் எங்கள் மொழி

எனது தொண்டை இருபெரும் பிரிவுகளாகப் பிரித்துக் கொண்டு ஆற்றி வருகின்றேன். ஒன்று, நத்தைக்கு கூடு