பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

79

என்பதை மட்டுமே கவனிக்கிறார்கள். ஆகவே, இஸ்லாமியத் தமிழ்ச் சமுதாயம் சரியான கோணத்தில், காலத்தின் போக்குக்கும் தேவைக்கு மேற்பயாரெல்லாம் பாடுபடுகிறார்களோ அவர்களை உரிய முறையில் இனங்கண்டு, அவர்கள் ஆற்றும் பணியைப் பாராட்டித் தட்டிக் கொடுக்கும் மன நிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும். தட்டிக் கொடுப்பதன் மூலம் மேன்மேலும் தூண்டி ஊக்குவிக்க வேண்டும். மாட்டைத் தட்டிக் கொடுத்தால் ஓடுகிறது. மனிதனைத் தட்டிக் கொடுத்தால் ஓட மாட்டானா? தட்டிக் கொடுக்கும் மனப்பான்மைக்குத்தான் கடுமையான பஞ்சம் நிலவுகிறது.

மக்கள் தொண்டே மகேசன் தொண்டு

ஒரு முஸ்லிம் என்ற முறையில் ஆக்கப்பணி எதுவாயினும் அதைத் திறம்படச் செய்ய வேண்டும். ஏனென்றால், ஒரு இஸ்லாமியாரின் அடிப்படைப் பண்பு பணி செய்து கொண்டிருப்பதுதான். 'மக்கள் தொண்டே மகேசன் தொண்டு' என்பது பொருள் பொதிந்த மொழியாகும். சிறந்த தொண்டு எதுவாயினும் அது இறைத் தொண்டாக மாறி விடுகின்றது. நான் செய்பவை பல பேருக்குப் பயன்படுகிறது. பல பேருக்குப் பயனுள்ளவனாக வாழ வேண்டும் என்பதுதான் நம் வாழ்க்கையின் நோக்கமாக இருக்க வேண்டும். அதுவே வல்ல அல்லாஹ் நமக்கு விதித்துள்ள விதியாகக் கருதுகிறேன்.

பிறர் நலம் பேணும் பேருள்ளம்

ஒரு முறை பெருமானார் (சல்) அவர்களை தோழர் ஒருவர் அணுகி 'மனிதர்களில் சிறந்தவர் யார்?' எனக் கேள்வி கேட்டார். உடனே அண்ணலார் அவர்கள் 'யாரொருவர் மற்றவர்கட்குப் பயனுள்ள முறையில் வாழ்கின்றாரோ அவர்தான் மனிதர்களில் சிறந்தவர்' எனப் பதிலளித்தார்.

6