பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80


இப் பதிலைக் கேட்டவர் மனநிறைவடையாமல் மேலும் தொடர்ந்து 'மனிதர்களில் மிகச் சிறந்த மனிதர் யார்?’ என மீண்டும் வினாத் தொடுத்தார். பெருமானார் (சல்) அவர்கள் உடனடியாக 'யாரொருவர் மற்றவர்கட்கு மிகவும் பயனுள்ள முறையில் வாழ்கின்றாரோ அவர்தான் மனிதர்களில் மிகச் சிறந்த மனிதர்' எனப் பதில் கூறினார்கள். இதிலிருந்து பிறர் நலன் நாடும் பேருள்ளம் கொண்டவர்கள் பேராண்மை மிக்கவர்களாக, இறையுவப்புக்கு உரியவர்களாக வாழ முடியும் என்பதை வள்ளல் நபி (சல்) அவர்களின் வாக்கமுது மூலம் நாம் அறிந்து மகிழ்கிறோம்.

பிறர் நலன் நாடும் நம் பணி எத்தகையதாக அமைய வேண்டும் என்பது முக்கியத்துவமுடைய ஒன்றாகும்.

இஸ்லாத்தைப் பற்றிய அறிவையும் உணர்வையும் புதுப்பிக்கும் வகையில் மீண்டும் மீண்டும் முஸ்லிம்களிடம் எடுத்துக் கூறுதல் அவசியம் என்றாலும், இஸ்லாம் என்றால் என்னவென்றே தெரியாத சகோதர சமயத்தவர்கள் மத்தியிலேதான் பெருமானாரைப் பற்றி எடுத்து விளக்கிச் சொல்லப்பட வேண்டும். மனித குலத்துக்கு வழிகாட்டியாக வந்த, அழகிய முன் மாதிரியாக இறைவனால் அனுப்பப்பட்ட நாயகத் திருமேனியின் வாழ்வும் வாக்கும், அதற்கு மூலாதாரமாயமைந்துள்ள திருமறையின் கொள்கை களையும் கோட்பாடுகளையும் முஸ்லிமல்லாதவர்களின் மத்தியில் முனைப்பாகக் கொண்டு செல்ல வேண்டும்.

அறியாமையே அடிப்படை

இன்றைக்கு இந்தியத் திருநாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான பல காரியங்கள் நடைபெறுகின்றன. தவறான போக்குகள் நிலவுகின்றன. ஒவ்வாத செயல்கள் பல நடைபெறுகின்றன, இதற்கெல்லாம் அடிப்படையாக அமைவது இஸ்லாத்தைப்பற்றியும் அம்மார்க்கத்தைப் பின்பற்றும் முஸ்லிம்களைப்பற்றியும் ஏற்பட்டுள்ள தவறான புரிந்துணர்வும் அறியாமையுமே யாகும். சாதாரண