பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7

சென்ற ஆண்டே இந்நூல் வெளிவந்திருக்க வேண்டும். ஆனால், எனது ஐரோப்பிய பயணமும், அமெரிக்கா, கனடா பயணங்களும் அதற்கு இடம் தரவில்லை . அந்நூல் ஈமான் அமைப்பின் பெருமைமிகு வெள்ளி விழாவில் வெளிவர வேண்டும் என்பது வல்ல அல்லாஹ்வின் நாட்டம் போலும். அனைத்து புகழும் வல்லோனுக்கே.

வளைகுடாவில் என் சொற்பொழிவுகள் சிறப்பாக நடைபெறவும், நூலுருவாக்கம் பெறவும் துணை நின்ற அத்தனை நல்லுள்ளங்களுக்கும் என் நன்றியைப் புலப்படுத்திக் கொள்வதில் பெருமையும் பேருவகையும் அடைகிறேன்.

சென்னை - 40
5.6.2000
அன்பன்
மணவை முஸ்தபா