பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

பல்கலைக் கழக முதுகலைப் பட்டம் வரை அனைத்து மட்டங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பது ஆங்கிலம் மட்டுமே. தமிழ் நாட்டுக் கல்விக் கூடங்களில் தமிழ் ஓரெழுத்தும் கற்காமல் ஆராய்ச்சிக்கான டாக்டர் பட்டம் வரை பெறும் அரிய வாய்ப்பு இத் தமிழகத்தைத் தவிர்த்து வேறு எங்குமே காண முடியாது. தமிழ் பயிற்சி மொழி என்பது கானல் நீராகவே உள்ளது. காரணம், யாரோ ஓரிரு விழுக்காட்டினர் ஆங்கிலம் படித்து பிற மாநிலங்களிலும் பிற நாடுகளிலும் வேலை வாய்ப்புப் பெற நேர்வதால் ஆங்கிலம் மட்டுமே கற்றால் போதும் என்ற ஒரு வித மாயை தமிழகத்தில் இன்று அழுத்தமாகப் பதியச் செய்யப்பட்டுள்ளது.

அதே சமயத்தில் மின்னல் வேகத்தில் ஏற்பட்டு வரும் விஞ்ஞான வளர்ச்சியை விவரிக்கும் மொழிகளாக தங்கள் மொழிகளை உருமாற்றி பல நாடுகள் வளர்த்து, வளப்படுத்தி வருகின்றன. நம் தமிழகத்தில் அறிவியலுக்கும் தமிழுக்கும் அவ்வளவு அதிகத் தொடர்பில்லை என்ற உணர்வில் தமிழைப் பேணி வருகிறோம். அறிவியலைச் சொல்லுவதற்கேற்ற மொழியாக ஒரு மொழி அமையவில்லை என்றால் அம்மொழி மறைந்தொழியும் என்ற உண்மையைக்கூட நம்மவர்கள் இன்னும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

உயிரை விடத் தயார், உழைக்கத் தயாரில்லை

இதையே இன்றையப் போக்கு உணர்த்துகிறது. அறிவியலை சொல்லுவதற்கேற்ற மொழியாகத் தமிழை உருமாற்றும் செயலை எந்தப் பல்கலைக் கழகமும் செய்வதாகத் தெரியவில்லை. அரசும் அந்த முயற்சியில் முனைப்புடன் ஈடுபடுவதாகத் தெரியவில்லை. எழுத்தாளர்களும் மற்றைய ஆசிரியர்களும்கூட இதில் முழுக் கவனம் செலுத்தி வருவதாகக் கூற முடியவில்லை. ஆனால், தமிழை வெறுமனே புகழ்வதிலும் 'தமிழ் வாழ்க’