பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

95

புத்தகம் ஏதாவது இருந்தால் தாருங்கள். அல்லது நான் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதற்கு வழிகாட்டுங்கள் என்று உருக்கமாக அவர் வேண்டிநின்ற போது, அவர் கண்களில் நீர் கோர்த்து நின்றன. பல பேருடைய நிலைமை இதுதான். இதை வெளிப்படையாகச் சொல்லவோ உதவி கேட்கவோ வெட்கப்பட்டு வாளாவிருந்து வருகிறார்கள்.

உதவி கேட்ட அந்தப் பெயர் தாங்கி முஸ்லிம் நண்பர்க்கு இதற்கென தமிழிலேயே நிறைய புத்தகங்கள் இருப்பதாகவும் கூறியதோடு பள்ளிவாசல் பேஷ் இமாம் தமிழ் முஸ்லிமாக இருப்பதால் அவரிடமே உதவி கேட்டு, முறையாகத் தொழுகைப் பயிற்சி பெறுங்கள் என்று கூறி ஊக்கமூட்டி அனுப்பினேன்.

எங்கும் சமயப் பெயர் தாங்கிகளே அதிகம்

இஸ்லாத்தில் மட்டும் இத்தகையவர்கள் இருப்பதாகக் கருத வேண்டாம். நாட்டிலுள்ள எல்லா மதங்களிலும் இத்தகையவர்களே அதிகம். மதங்களைச் சார்ந்த பெற்றோர்க்குப் பிள்ளைகளாகப் பிறந்த ஒரே காரணத்திற்காக அந்தந்த மதச் சார்பான பெயர்களைத் தாங்கியவர்களாக உலவுகிறார்களேயன்றி, மதத் தத்துவங்களையோ சமயக் கருத்துகளையோ எதையுமே அறிந்தவர்கள் இல்லை. எனவே, முஸ்லிம் பெயர் தாங்கிகளாக உலவுகின்றவர்களுக்கும் இஸ்லாமிய அடிப்படைக் கருத்துகளை பெருமானார் வாழ்வு மற்றும் வாக்குகளின் அடிப்படையில், திருமறை வழியே எடுத்துக்கூறி தெளிவுறுத்த வேண்டும். அதே சமயத்தில் இஸ்லாம் பற்றி, எதுவும் தெரியாததோடு தப்பும் தவறுமாக இஸ்லாத்தைப் பற்றி எண்ணிக் கொண்டு, அதே கண்ணோட்டத்தில் நம்மைப் பார்க்கும் நம் சகோதர சமய நண்பர்களுக்கும் மார்க்கம் பற்றிய உண்மைக் கருத்துகளை தத்துவ உண்மைகளை எடுத்துக்கூறித் தெளிவுபடுத்தும் கட்டாயக் கடமையாளர்களாகவும் நாம்